Dhanush: அடிமேல் அடிவாங்கும் கங்குவா..அலார்ட் செய்த ரசிகர்கள்..குபேராவைக் காப்பாற்ற உஷாராவாரா தனுஷ்?
சென்னை: சூர்யாவின் கங்குவா படம் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தினை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் பெரும்பான்மையான தியேட்டர்களில் வெளியானது. படம் பார்த்த ரசிகர்களில் பெரும்பான்மையானவர்கள் படத்தின் இசை மிகவும் மோசமாக இருப்பதாகவும், பின்னணி இசை இரைச்சலாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் குபேரா. இந்தப் படத்திற்கு கங்குவா படத்திற்கு இசை அமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் என்பதால் தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் தங்களது ஆதங்கத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவிலேயே தவிர்க்க முடியாத நடிகர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ராயன். இந்தப் படத்தினை தானே இயக்கி தானே நடிக்கவும் செய்திருந்தார். மேலும் இந்தப் படம் இவரது 50வது படம். இந்தப் படம் வசூலில் சுமார் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்ததால், படம் வசூலில் வெற்றிப் படமாக மாறியது. இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் குபேரா.

இந்தப் படம் நேரடி தமிழ் படமாகவும் நேரடி தெலுங்குப் படமாகவும் வெளியாகவுள்ளது. ஏற்கவே தனுஷ் நடிப்பில் தெலுங்கில் சார் எனவும் அதேபடம் தமிழில் வாத்தி என்ற பெயரிலும் வெளியானது. தெலுங்கு இயக்குநரும் தேசிய விருது பெற்ற இயக்குநருமான சேகர் கமுலாவின் குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தில் நடிகர் நாகர்ஜுனாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தனுஷின் 51வது படமாக வெளியாகவுள்ள குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

கங்குவா: இங்குதான் பிரச்னையே தொடங்குகின்றது. அதாவது, இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் கடைசியாக வெளியான படம் கங்குவா. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என நினைத்துக் கொண்டு இருந்த நேரத்தில் கலவையான விமரசனங்களைப் பெற்று வருகின்றது. குறிப்பாக படத்தின் பின்னணி இசை மிகவும் இரைச்சலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் படம் பெரும் நெகடிவ் விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் படக்குழு தரப்பில் இருந்து தியேட்டர்களுக்கு படத்தின் ஒலி அளவினை இரண்டு பாய்ண்ட்கள் குறைக்கச் சொல்லி அறிவுரை வழங்கப்பட்டது.

கவலை: இப்படியான நெருக்கடியோ, விமர்சனங்களோ தனுஷ்ஷின் குபேரா படத்திற்கு வந்துவிடக்கூடாது என தனுஷ் ரசிகர்கள் கருதுவதால், இணையத்தில் குபேரா படத்தின் பின்னணி இசையை நினைத்து தங்களது கவலையை வெளிப்படுத்தி வருகின்றது. இதனால் படத்தின் பின்னணி இசை வேலைகளின்போது தனுஷ்ஷும் முழுமையாக தனது ஒப்பினியனை தெரிவித்து சிறப்பான பின்னணி இசை அமைக்கச் சொல்லவேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

புஷ்பா 2: குபேரா படம் இந்த ஆண்டு இறுதியில் குறிப்பாக டிசம்பர் விடுமுறையில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வரும் டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆகவுள்ளது. புஷ்பா 2 படத்தின் ட்ரைலர் இன்று அதாவது நவம்பர் 17ஆம் தேதி மாலை 6.03 மணிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











