காக்கா முட்டை ரிலீசாகி 5 வருஷமாகிடுச்சு.. தனுஷை மறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஞாபகப்படுத்திய ரசிகர்கள்!
சென்னை: வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்த காக்கா முட்டை திரைப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
Recommended Video
இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு மகன்களுக்கு அம்மாவாக நடித்து அசத்தியிருப்பார்.
இந்த படத்தின் 5ம் ஆண்டு நினைவை கொண்டாடும் வகையில் டிவீட் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறனை மறந்து விட்டதாக தனுஷ் ரசிகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பீட்சா கதை
2015ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை திரைப்படம் தேசிய விருதை தட்டிச் சென்றது. ஜே. விக்னேஷ், ரமேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரமேஷ் திலக், சிம்பு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படத்தில், பீட்சா தின்ன ஆசைப்படும் ஏழை குழந்தைகளின் ஆசை, நிராசை, கனவு, கவலை உள்ளிட்ட விஷயங்களை தெளிவாக எடுத்துக் காட்டியிருப்பார் மணிகண்டன்.

ஹாஃப் டிக்கெட்
சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படம் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் என இரு பிரிவின் கீழ் தேசிய விருதை தட்டிச் சென்ற இந்த படத்தை மராத்தி மொழியில் ஹாஃப் டிக்கெட் (Half Ticket) எனும் பெயரில் பிரபல இயக்குநர் சமீத் கக்கத் இயக்கி இருந்தார்.

இயக்குநருக்கு
இந்நிலையில், காக்கா முட்டை திரைப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் ஆனதை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டிவிட்டரில் பதிவிட்டு, அந்த படத்தின் இயக்குநர் மணிகண்டனுக்கு தனது நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்திருந்தார். "இந்த படம் எனது நெஞ்சுக்கு நெருக்காமானது, இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநர் மணிகண்டனுக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

தனுஷை மறந்துட்டீங்க
இந்நிலையில், அவரது டிவீட்டுக்கு கீழே குவிந்த தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ரசிகர்கள், இந்த படம் வெளியே தெரிவதற்கு காரணமே நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் தான் அவர்கள் இருவரையும் மறந்து விட்டு, எப்படி இயக்குநருக்கு மட்டும் நன்றி சொல்றீங்க என தொடர்ந்து பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

தலைவனை மறந்துட்டீங்க
மற்றொரு ரசிகர், "வாய்ப்புக் கொடுத்த எங்க தலைவனையே மறந்துட்டீங்க" #கலிகாலம், #ஜகமே தந்திரம் என போட்டு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றி மறந்ததாக சுட்டிக் காட்ட தொடங்கினர். ஐஸ்வர்யா ராஜேஷின் அசத்தலான நடிப்பை அவரது ரசிகர்கள் பாராட்டி ஒரு புறம் கமெண்ட்ஸ் பறக்க, தனுஷ் ரசிகர்களோ, தனுஷ், வெற்றிமாறனுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும் என்கிற ரீதியில் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டனர்.

கண்டிப்பா
தனுஷ் ரசிகர்கள் தொடர்ந்து போட்ட கமெண்ட்ஸை பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷ், நமக்கு எதுக்குப்பா ரசிகர்களோடு வம்பு என உணர்ந்து கொண்டு, கண்டிப்பா, தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இல்லைன்னா இந்த படமே வெளிய வந்துருக்காது என்றும், மொத்த குழுவுக்கு நன்றியும் அன்பும் என மற்றொரு டிவீட்டை உடனடியாக போட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.


Click it and Unblock the Notifications











