சிம்பிளாக நடக்கும் ‘பட்டாஸ்’ இசை வெளியீட்டு விழா.. வருத்தத்தில் தனுஷ் ரசிகர்கள்

சென்னை: நடிகர் தனுஷின் 'பட்டாஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழா, சூரியன் எஃப்.எம்.மில் சிம்பிளாக நடைபெற்று வருகிறது.

இன்று நண்பகல் 12.30 மணிக்கு பட்டாஸ் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகவுள்ளன.

இயக்குநர் துரை செந்தில்குமார், இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்வின் மற்றும் பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் சூரியன் எஃப்.எம்.மில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடித்து வரும் தனுஷ் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை.

சிம்பிளாக இந்த இசை வெளியீட்டு விழா நடைபெறுவது தனுஷின் பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தனுஷ் ட்வீட்

#PattasAudio என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி தனுஷ் ரசிகர்கள் சென்னை டிரெண்டிங்கில் முதலிடத்தில் பட்டாஸ் ஹாஷ்டேக்கை கொண்டு வந்து வேறலெவலில் கொண்டாடி வருகின்றனர். நடிகர் தனுஷ் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் பட்டாஸ் இசை வெளியீடு குறித்து ட்வீட் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

வா தலைவா

பட்டாஸ் ஆடியோ நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர். தனுஷ் போட்ட ட்வீட்டுக்கு கீழே பல ரசிகர்கள் 'வா தலைவா' என கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிம்பிளாக

இளம் நடிகர்கள் படங்களின் இசை வெளியீட்டு விழாக்களே பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிற நிலையில், சூரியன் எஃப்.எம்.மில் சிம்பிளாக தனுஷின் பட்டாஸ் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

வருத்தத்தில் ரசிகர்கள்

இந்த ஆண்டின் மோசமான இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி இது என்றும், தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதியையும் பல ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஏமாற்றம்

பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியையும், தனுஷின் டக்கரான பேச்சையும் கேட்கலாம் என நினைத்த ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

டிராக் லிஸ்ட்

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்தில் விவேக் - மெர்வின் இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். புது சூரியன், சில் ப்ரோ, ஜிகிடி கில்லாடி, மொரட்டு தமிழன் டா, பிரியாத என்ன, எ மதர்ஸ் லவ் மற்றும் மவனே என மொத்தம் 7 மியூசிக் டிராக்குகள் இடம்பெற்றுள்ளன.

மாஸ் ஹிட்

மாஸ் ஹிட்

இதுவரை வெளியான சில் ப்ரோ, மொரட்டு தமிழன் டா, ஜிகிடி கில்லாடி ஆகிய மூன்று பாடல்களும் மாஸ் ஹிட் ஆகியுள்ளன. மேலும், பிரியாத என்ன பாடலும் தற்போது சூரியன் எஃப்.எம்.மில் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X