ஏப்ரல் 10 இட்லி கடையை இறக்கு தலைவா.. மோதி பார்க்கலாம்.. தனுஷுக்கு நம்பிக்கை கொடுக்கும் ரசிகர்கள்
சென்னை: தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக இரண்டு படங்கள் தயாராக உள்ளது. இதில், குபேரா படம் முதலில் ரிலீஸ் ஆகுமா இல்லை, இட்லி கடை படம் முதலில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி தனுஷ் ரசிகர்களுக்கு உள்ளது. அப்படி இருக்கும் போது, முதலில் ரிலீஸ் ஆவதாக இருந்த குபேரா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது, இதனால் இட்லி கடை படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. அதே தேதியில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆகவுள்ளதால், இட்லி கடை படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகலாம் என கூறப்படுகிறது. ஆனால் தனுஷ் ரசிகர்கள் அதே தேதியில் இட்லி கடை படத்தை ரிலீஸ் செய்யச் சொல்லி கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று ரிலீஸ் ஆனது இதுவரை 25 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த டீசரை பார்த்துள்ளார்கள். அப்படி இருக்கும்போது இந்தப் படத்தின் ஹைப் அதிகமாகிக் கொண்டே உள்ளது. குட் பேட் அக்லி படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பெரிய நட்சத்திர பட்டாளமே, நடித்துள்ளது.

படத்தின் டீசரில், அஜித்தின் மாஸான படங்களின் ரெஃபரன்ஸ் எல்லாம் இடம் பெற்றதால் டீசரை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள், கொண்டாடி தீர்த்தார்கள். ஏப்ரல் 10ஆம் தேதி இட்லி கடை படம் ரிலீஸ் ஆகவுள்ளது எனக் கூறியதால், அஜித் ரசிகர்கள் சிலர், தனுஷ் மற்றும் தனுஷின் இட்லி கடை படத்தை மோசமாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் திரைத்துறை வட்டாரத்தில், இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கப் போவதாக கூறப்படுகிறது.

தனுஷ் ரசிகர்கள்: அப்படி இருக்கும்போது, தனுஷ் மற்றும் தனுஷின் இட்லி கடை படத்தை கேவலமாக விமர்சிக்கும் அஜித் ரசிகர்களுக்கு தனுஷ் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அதாவது, அஜித் மற்றும் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தினை கேவலமாக விமர்சித்தும், மரியாதை குறைவாக விமர்சித்து மீம்களும் பகிர்ந்து வருகிறார்கள். சில ரசிகர்கள் பொல்லாதவன் படத்தில் வரக்கூடிய, ' அந்த பையன் கண்ணுல பயம் இல்லை' என்ற வசனம் கொண்ட வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
விடாமுயற்சி: மேலும், " ஏப்ரல் 10ஆம் தேதி இட்லி கடையை நீ இறக்கு தலைவா, மீதியை நாங்க பார்த்துக் கொள்கிறோம்" என ஒருவர் பதிவிட்டுள்ளார். பொன்னியின் செல்வன், பாகுபலி, கே.ஜி.எஃப் கூடவே கிலாஷ் விட்டாருடா அந்த மனுசன். அஜித் கூட விடமாட்டாரா, சம்பவம் பண்ணு தலைவா என பதிவிட்டு தனுஷை டேக் செய்துள்ளார். மற்றொருவர் விடாமுயற்சி படத்தை விட வசூலில் ராயன் அதிகம் வசூல் செய்தது. அதேபோல் குட் பேட் அக்லி படத்தை விட இட்லி கடை வசூல் இருக்கும் என பதிவிட்டுள்ளார்.
இட்லி கடை: இன்னொரு தனுஷ் ரசிகர் தனுஷை டேக் செய்து, கெத்து அண்ணா நீ, ஆஃப் லைன் வரைக்கும் கதறவிடுற எனப் பதிவிட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல் இன்னும் பல தனுஷ் ரசிகர்கள் ஏப்ரல் 10 ஆம் தேதியே படத்தை ரிலீஸ் செய்யச் சொல்லி கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் தனுஷ் ஏற்கனவே படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











