அன்புவின் எழுச்சி எப்போ வெற்றிமாறன் சார்? வடசென்னை 2க்காக பொங்கி எழுந்த ரசிகர்கள்

சென்னை: சார்பட்டா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கும் சூழலில் வடசென்னை 2 ஹேஷ்டேக்கை தனுஷ் ரசிகர்கள் ட்ரெண்டாக்கியுள்ளனர்.

பொல்லாதவன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். பாலுமகேந்திராவிடம் பாடம் படித்த வெற்றிமாறன் தனது முதல் படமான பொல்லாதவன் படத்திலேயே தான் எப்படிப்பட்ட இயக்குநர் என்பதை நிரூபித்துவிட்டார். கமர்ஷியல் படமாக அது அமைந்தாலும் வடசென்னை குறித்தும், பைக் திருட்டு பற்றியும் டீட்டெயிலாகவே பேசியிருப்பார் வெற்றி.

ஆடுகளத்தில் அதகளம் செய்த வெற்றிமாறன்

ஆடுகளத்தில் அதகளம் செய்த வெற்றிமாறன்

முதல் பட வெற்றிக்கு பிறகு இரண்டாவது படமாக ஆடுகளம் படத்தை இயக்கினார். இதிலும் தனுஷ் நடித்தார். ஆனால் சென்னையை கதைக்களமாக வைத்துக்கொள்ளாமல் மதுரையை தேர்ந்தெடுத்தனர். சேவல் சண்டை குறித்தும், அதனால் எழும் ஈகோ குறித்தும் நுட்பமாக பேசிய ஆடுகளம் படம் 5க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. மேலும் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணிக்கு என்று ரசிகர் கூட்டமும், எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரித்தது.

ரசிகர்களை மெர்சலாக்கிய வடசென்னை

ரசிகர்களை மெர்சலாக்கிய வடசென்னை

ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து விசாரணை படத்தை இயக்கிவிட்டு மீண்டும் தனுஷுடன் இணைந்தார் வெற்றிமாறன். படத்துக்கு வடசென்னை என பெயர் வைக்கப்பட்டது. முதலில் அந்தக் கதை சிம்புவுக்குத்தான் சொல்லப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படத்தில் அவர் நடிக்காமல் போக உள்ளே வந்தார் தனுஷ். அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடித்திருந்த அந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.

விமர்சனத்தை சந்தித்த வடசென்னை

விமர்சனத்தை சந்தித்த வடசென்னை

படத்தில் ஏகப்பட்ட கூஸ்பம்ப்ஸ் சீன்கள் இருந்ததாக ரசிகர்கள் சிலாகித்தனர். அதேசமயம் வடசென்னை மக்கள் குறித்து வெற்றிமாறன் தவறாக சித்தரித்துவிட்டதாக ஒரு சிலர் விமர்சனத்தையும் முன் வைத்தனர். இருப்பினும் பெரும்பாலானோரால் படம் கொண்டாடவேப்பட்டது. மேலும் வடசென்னை படத்தை முடிக்கும்போது அன்புவின் எழுச்சி விரைவில் என வடசென்னை 2க்கு லீடையும் கொடுத்திருந்தார் வெற்றிமாறன்.

வடசென்னை 2 எப்போது?

வடசென்னை 2 எப்போது?

இதனால் வடசென்னை 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எக்கச்சக்கமாக இருக்கிறது. ஆனால் அதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெற்றிமாறன் வெளியிடவில்லை. ஒரு மேடையில் தனுஷேகூட வடசென்னை 2 எப்போது என கேட்க அதற்கும் தெளிவான பதிலை சொல்லவில்லை வெற்றிமாறன். இருப்பினும் வடசென்னை 2 படத்தை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். ஆனால் வெற்றிமாறனோ வேறு வேறு படங்களில் பிஸியாக இருக்கிறார்.

ட்விட்டரை தெறிக்கவிடும் தனுஷ் ரசிகர்கள்

ட்விட்டரை தெறிக்கவிடும் தனுஷ் ரசிகர்கள்

இப்படிப்பட்ட சூழலில் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி மெகா ஹிட்டான சார்பட்டா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. யாருமே எதிர்பார்க்காத சூழலில் இந்த அறிவிப்பு வெளியானது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும்; தற்போது அவர்களது கவனம் வடசென்னை இரண்டாம் பாகம் பக்கம் திரும்பியிருக்கிறது. எனவே ட்விட்டரில் Vadachennai2 என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்டாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த ஹேஷ் டேக்கில் வடசென்னை படத்தின் வீடியோ க்ளிப்பிங்குகளை பகிர்ந்து வடசென்னை 2 படத்தை வெற்றிமாறன் உடனடியாக இயக்க வேண்டும் என வலியுறுத்திவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X