வெற்றிமாறன் – தனுஷின் விஸ்வரூபம்.. 100 நாட்களை கடந்த அசுரன்.. கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் 100 நாட்களை கடந்துள்ளது.
அசுரன் திரைப்படம் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், தனுஷ் ரசிகர்கள் #AsuranBB100Days என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி வேற லெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், டீஜே, கென் கருணாஸ், பிரகாஷ்ராஜ், பசுபதி, ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு அசுரன் படம் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கேக் வெட்டி கொண்டாட்டம்
அசுரன் திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4ம் தேதி வெளியானது. தனுஷின் அசுரன் திரைப்படம் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் தனுஷ் ரசிகர்கள் தியேட்டரில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
150 கோடி வசூல்
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை தொடர்ந்து 4வது முறையாக வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. தமிழில் நடிகர் தனுஷுக்கு முதல் முறையாக 100 கோடி வசூலை ஈட்டித் தந்தது அசுரன் தான். அசுரன் திரைப்படம் 150 கோடி வரை வசூல் செய்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Trend Tag 👉 #AsuranBB100Days pic.twitter.com/l7FBh9B5n9 — DHANUSH BALA™ (@Itz_DhanushBala) January 11, 2020 '>
100வது நாள் கொண்டாட்டம்
தனுஷின் அசுரன் திரைப்படம் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கில் தனுஷ் ரசிகர்கள் 100வது நாளை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சரித்திரம் – சாதனை – சகாப்தம்
100 நாட்களை கடந்துள்ள நிலையில், அசுரன் படத்தின் 100வது நாள் பேப்பர் விளம்பரத்தில் சரித்திரம் - சாதனை - சகாப்தம் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. அதனை தனுஷ் ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
மீம் க்ரியேட்டர்களுக்கு உதவிய டெம்பிளேட்கள்
பாக்ஸ் ஆஃபிஸ் சாதனை படைத்தது மட்டுமின்றி தனுஷின் அசுரன் திரைப்படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் மீம் க்ரியேட்டர்களுக்கும் செம்ம தீனி போட்டது. அதுவும், நீங்க நம்பலனாலும் அதுதான் நெசம் என்கிற மீம் தான் ஹைலைட்.
அந்த சிரிப்பு ஒன்றே போதும்
கிளைமேக்ஸ் காட்சியில் தனுஷ் சிரிக்கும் அந்த சிரிப்பு ஒன்றே போதும் தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்பதை வெளிப்படுத்த என கிளைமேக்ஸ் காட்சி க்ளிப்புகளையும் பதிவிட்டு டிரெண்ட் செய்கின்றனர்.
அசுரன் பொங்கல்
வரும் பொங்கல் தின சிறப்பு படமாக விஜய் டிவியில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் ஒளிபரப்பாகிறது. பொங்கலுக்கு தனுஷின் பட்டாஸ் படம் திரையரங்கில் கலக்கவுள்ள நிலையில், சின்னத்திரையில் அசுரன் படம் ஆட்சி செய்யும் என ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











