கேப்டன் மில்லர் ஃபிளாப்பான கடுப்பா?.. சிவகார்த்திகேயன் குரலை கிண்டலடிக்கும் தனுஷ் ரசிகர்கள்?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள மேஜர் முகுந்தின் பயோபிக் படமான அமரன் திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.
அந்த படத்தின் மிரட்டலான விஷுவல்ஸையும் ராணுவ அதிகாரியாக மாறுவதற்காக சிவகார்த்திகேயன் எடுத்த முயற்சியையும் பலரும் பாராட்டி வரும் நிலையில், சிலர் சோஷியல் மீடியாவில் சிவகார்த்திகேயன் குரல் செட்டாகவில்லை என்கிற கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் தனுஷின் ரசிகர்கள் தான் அதிகப்படியாக சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காமல் இது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருவதாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் பிறந்தநாள்: 1985 ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி சிங்கம்புணரி எனும் கிராமத்தில் பிறந்தவர் சிவகார்த்திகேயன். சிறுவயதிலிருந்து கஷ்டப்பட்டு எப்படியாவது எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்து விஜய் டிவியில் ஆரம்பமான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டாண்டப் காமெடியனாக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். அதே விஜய் டிவியில் தொகுப்பாளராக மாறி அது இது எது, விஜய் டிவி விருதுகள் என பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தவர் அஜித்தின் ஏகன் படத்தில் சிறு வேடத்திலும் தனுஷின் 3 படத்தில் நண்பனாகவும் நடித்திருப்பார். சிவகார்த்திகேயன் திறமையை பார்த்து வியந்து போன தனுஷ் அவருக்காக எதிர்நீச்சல் படத்தை தயாரித்து இருந்தார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய சிவகார்த்திகேயன் இன்று கோலிவுட்டின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கிறார்.
அமரன் டைட்டில் டீசர்: கடந்த 2014 ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு தழுவி உருவாக்கப்பட்டுள்ள அமரன் படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது. சிவகார்த்திகேயன் கடுமையான உழைப்பை பலரும் பாராட்டி வரும் நிலையில் அவரது வாய்ஸ் அந்த கதாபாத்திரத்திற்கு செட்டே ஆகவில்லை என சோசியல் மீடியாவில் சிலர் ட்ரோல்களை குவிக்க ஆரம்பித்துள்ளனர்.

குரல் செட்டாகல: ராணுவத்தில் வேலை செய்யும் அதிகாரிகள் எல்லாம் கம்பீரமான குரல் வளத்துடன் தான் இருக்க வேண்டும் என்கிற நினைப்புடன் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் குரல் சரியாக செட் ஆகவில்லை என சோசியல் மீடியாவில் தனுஷ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர் என்றும் கேப்ட்ன் மில்லர் படத்தின் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் தான் இப்படி பேசுவதாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தனுஷுக்கும் இதே கதிதான்: துள்ளுவதோ இளமை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் போலீஸ் யூனிஃபார்ம் அணிந்து வரும்போது பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் கேப்டன் மில்லர் படத்தில் அவரது லுக் வேற லெவலில் மிரட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. சிம்பு மற்றும் தனுஷை தாண்டி சிவகார்த்திகேயன் அடுத்த தளபதி என்கிற ரேஞ்சுக்கு சென்று விடுவாரோ என்கிற பயத்தால் தான் இந்த பிரச்சனை வெடித்து வருகிறது என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். விஜய்க்கு ஒரு துப்பாக்கி போல சிவகார்த்திகேயனுக்கு அமரன் அமையும் என விஜய் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











