தனுஷ் ரசிகர்கள் நற்பணி இயக்கம் கொடி அறிமுகம்.. டீ கோட் செய்யறாங்களேப்பா.. நல்லது நடந்தா சரினு பேச்சு

சென்னை: நடிகர் தனுஷ் ரசிகர் நற்பணி மன்றத்தின் கொடியை ரசிகர் மன்றத்தினர் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இணையத்தில் இது தொடர்பான பேச்சுக்கள் அதிகமாகி உள்ளது. அதிலும் குறிப்பாக இரட்டை நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கொடி குறித்து பலரும் டீ- கோடு செய்து வருகிறார்கள். அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்

சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களை அமைத்து அவர்களது ரசிகர்கள் அந்த நடிகர்களின் படங்கள் வெளியாகும் காலகட்டத்தில் கொண்டாடி வரவேற்பது என்பது மிகவும் வழக்கமான ஒன்றுதான். இது இப்படி இருக்க, நடிகர்களோ தங்களது ரசிகர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர் மன்றங்களை ரசிகர் நற்பணி மன்றங்களாக மாற்றுவார்கள். இதன் மூலம் நடிகரின் பிறந்த நாள் வரும் போது நலத்திட்ட உதவிகளை மக்களுக்குச் செய்வது. இயற்கைப் பேரிடர் பிரச்னைகள் வரும் போது மக்களுக்கும் அரசுக்கும் உதவியாக இருப்பது, கல்வியில் சாதிக்கும் குழந்தைகளை ஊக்குவிப்பது என பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்வது வாடிக்கையானது.

இப்படியான நலத்திட்டங்களை நடிகர் தனுஷ்ஷின் ரசிகர்கள் தனுஷ் பிறந்த நாளில் செய்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் தனுஷ் ரசிகர் நற்பணி மன்றத்தின் அடையாளமாக கொடியை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இது சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொடியில் நடிகர் தனுஷ் கை கூப்பி வணக்கம் சொல்லும் படி, கருப்பு நிறத்தில் இடம் பெற்றுள்ளது. அதேபோல் தனுஷ் படத்திற்கு பிறகு ஒரு நட்சத்திரம் இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Dhanush Fans Unveil Welfare Flag Social Media Buzzes Over Symbolism and Hidden Meanings

அந்த நட்சத்திரம் சிவப்பு நிறத்தில் இடம் பெற்றுள்ளது. இத்துடன் எண்ணம் போல் வாழ்க்கை.. எண்ணம் போல்தான் வாழ்க்கை" என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. மொத்தத்தில் இந்த கொடி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது மட்டும் இல்லாமல், இது டிரெண்டாகவும் உள்ளது. அதிலும் குறிப்பாக சில இணையவாசிகளோ தனுஷ் சினிமாவைக் கடந்தும் மக்கள் மனதில் நலத்திட்டங்கள் மூலம் இடம் பெற்று வரும் நிலையில், இந்த கொடி பல யூகங்களுக்கு வழி வகுக்கிறது என்று பதிவிட்டு வருகிறார்கள்.

Dhanush Fans Unveil Welfare Flag Social Media Buzzes Over Symbolism and Hidden Meanings

மேலும் பலரோ தனுஷ்ஷை டேக் செய்து வாழ்த்தி வருகிறார்கள். அதேபோல், இந்த கொடி தொடர்பாக தனுஷ் தனது எக்ஸ் பக்கத்திலோ, இன்ஸ்டாகிராம் பக்கத்திலோ நேரடியாக எந்தவிதமான பதிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X