Kara Ticket Booking: விடுமுறை நாளிலும் காத்து வாங்கும் ‘கர’.. தனுஷ் ரசிகர்கள் கடும் அப்செட்!
சென்னை: நடிகர் தனுஷ் கன்டென்ட் படங்களை கொடுக்கிறேன் என்கிற பெயரில் ரசிகர்களை தொடர்ந்து போரடிக்க வைத்துவிட்டார் என்றும் 'கர' படம் சுவாரஸ்யமே இல்லாமல் உள்ளதாக பலரும் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய நிலையில், சனிக்கிழமையான இன்றும் படத்திற்கான டிக்கெட் புக்கிங் ரொம்பவே டல்லடித்து காணப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் வேறு வேறு பாதையில் பிசியாக சென்றுவிட்ட நிலையில், அடுத்த இடத்தில் இருந்த தனுஷ் மற்றும் சிம்பு தங்களுக்கான இடத்தை சிவகார்த்திகேயன் மற்றும் பிரதீப் ரங்கநாதனிடம் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.

அசுரன் படத்தின் மூலம் சிம்பு கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கர படம் தனுஷுக்கு கைகொடுக்கவில்லை என்பதால், சோஷியல் மீடியாவில் தனுஷ் vs சிம்பு ரசிகர்கள் சண்டையை தாண்டி தனுஷ் ரசிகர்களே தனுஷை திட்டும் அளவுக்கும் இனிமேல் கமர்ஷியல் படங்களை பாருங்க என சொல்லும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது.
குறைவான வசூல்: வேல்ஸ் நிறுவனம் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வந்தாலும் அந்த நிறுவனத்துக்கு பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியே கிடைப்பதில்லை. தொடர்ந்து தனுஷ் படங்களும் சரிவை சந்தித்து வந்த நிலையில், இந்த முறை விக்னேஷ் ராஜா மெகா வெற்றியை தனுஷுக்கு கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது தான் படம் வெளியான பின்னர் ரசிகர்கள் அப்செட் ஆக காரணம் என்கின்றனர். இதுவரை வெறும் 20 கோடி மட்டுமே வசூல் வந்துள்ளது. படம் முதல் வாரத்தை தாண்டி பிக்கப் ஆகுமா? என்பதும் டவுட்டு தான் என்கின்றனர்.
டிக்கெட் புக்கிங் ரொம்ப டல்: சனி, ஞாயிறு ரசிகர்கள் கூட்டம் தியேட்டர் பக்கம் அலைமோதினால் தான் பெரிய வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை இதுவரையிலுமே எந்தவொரு தியேட்டரிலும் ஹவுஸ்ஃபுல் போர்ட் மாட்டவில்லை. மேலும், பல தியேட்டர்களில் வெறும் பச்சை நிறம் மட்டுமே பல் இளிக்கிறது.
ஞாயிறு மட்டுமே நம்பிக்கை: சனிக்கிழமை மாலை மற்றும் இரவு காட்சிகள் பிக்கப் ஆனால் கூட, ஞாயிற்றுக்கிழமை படத்துக்கான டிக்கெட் புக்கிங் அதிகரித்தால் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்கின்றனர். மேலும், இந்த படத்தின் பட்ஜெட் அதிகம் இருக்காது என்பதால், தயாரிப்பு நிறுவனத்துக்கு 50 கோடிக்கு மேல் வசூல் வந்தாலே சமாளித்து விடுவார்கள் என்கின்றனர். ஆனால், 60 கோடிக்கு மேல் சம்பளம் கேட்கும் நடிகர் தனுஷ் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 100 கோடி வசூலையாவது கடக்க வேண்டும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications