மருமகளுக்கு எங்கள் குடும்பம் செட் ஆகல.. பாவம் அவங்க.. டைவர்ஸுக்கு காரணம் இதுவா?.. தனுஷின் தந்தை ஓபன்

சென்னை: நடிகர் தனுஷ் கோலிவுட்டின் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் படம் விமர்சன ரீதியாக அப்படி இப்படி பேசப்பட்டாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸையே பெற்றது. இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவரும் தனுஷ்; ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்ந்துவருகிறார். இந்தச் சூழலில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா அளித்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

தனுஷ் இப்போது கோலிவுட்டின் சிறந்த நடிகராக திகழ்ந்துவருகிறார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, ஹாலிவுட் ஆகியவைகளிலும் நடித்துவருகிறார். துள்ளுவதோ இளமை படத்தில் யாரெல்லாம் அவரை உருவ கேலி செய்தார்களோ அவர்கள் எல்லாம் இப்போது மூக்கின் மீது விரலை வைத்து பார்த்துவருகிறார்கள் தனுஷை. அந்த அளவுக்கு தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவைத்திருக்கிறார். நடிப்பு, இயக்கம், பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என கலக்குகிறார் தனுஷ்.

Dhanush Aishwarya Kasthuri Raja

ராயன்: தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன் படம் வெளியானது. அந்தப் படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். தங்கை செண்ட்டிமெண்ட் என்ற பழைய அஸ்திவாரத்தை வைத்து ராயனை கட்டியிருந்தார் தனுஷ். படம் விமர்சன ரீதியாக பெரிதாக கொண்டாடப்படவில்லை. அதேசமயம் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்துக்கு பிறகு அவர் குபேரா படத்தில் நடித்துவருகிறார். அதுதவிர்த்து இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜுடன் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் என பிஸியாக இருக்கும் தனுஷ்; அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்திலும் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

விவாகரத்து: இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தனுஷ். இருவருக்கும் யாத்ரா, லிங்கா என்ற மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த தனுஷ் - ஐஸ்வர்யா திருமண வாழ்க்கை இப்போது பிரிவில் நிற்கிறது. இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயற்சிகள் மேற்கொள்வதாக சொல்லப்பட்டாலும்; சட்டப்பூர்வமாக விவாகரத்து கோரியிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கஸ்தூரி ராஜா பேட்டி: இந்நிலையில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு அவர் அளித்திருந்த பேட்டியில், "எனது நான்கு பிள்ளைகளும் ஒரு கேங். மூத்த மகள் கொஞ்சம் வெகுளி. ஏமாந்துவிடுவார். இரண்டாவது மகள், செல்வராகவன், தனுஷ் விவரம். இவர்களில் எனது மருமகள்தான் பாவம். இவர்கள் பேசும் பாஷையும் மருமகளுக்கு புரியாது. அவங்களுக்கு செட் ஆகல. அய்யோ என்னடா இது இந்தக் குடும்பத்தில் இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே என்றுதான் நினைத்தார். ஆனால் இப்போது செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு வேறு வழியில்லை பொறுத்துக்கிட்டாங்க" என்றார்.

யாரை சொல்கிறார்: இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் கஸ்தூரி ராஜா யாரை சொல்கிறார். ஐஸ்வர்யாவையா இல்லை சோனியா அகர்வாலையா. ஏனெனில் சோனியா அகர்வாலுக்குத்தான் தமிழ் ஒழுங்காக வராது; பெரிதாக புரியாது. அதேசமயம் ஐஸ்வர்யா தமிழ்நாட்டில்தான் பிறந்து வளர்ந்தார். எனவே கஸ்தூரி ராஜா சொல்வது சோனியா அகர்வாலைத்தான் என்று அடித்து சொல்லிவருகிறார்கள். முன்னதாக புதுப்பேட்டை பட சமயத்தில் செல்வராகவனுக்கும், சோனியா அகர்வாலுக்கு காதல் மலர்ந்து திருமணமும் நடந்தது. ஆனால் சில காரணங்களால் விவாகரத்து செய்துகொண்டனர். பிறகு செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X