எவ்வளவோ முயற்சி செய்தேன்.. என் மகன் என்பதால் சேர்க்கவில்லை.. எல்லாம் தலையெழுத்து.. தனுஷ் தந்தை ஓபன்

சென்னை: துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும் அடுத்தடுத்த படங்களில் செல்வராகவன் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக மாறினார். சோனியா அகர்வாலை திருமணம் செய்த அவர்; விவாகரத்து பெற்றுவிட்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இந்தச் சூழலில் செல்வராகவன் குறித்து அவரது தந்தை கஸ்தூரி ராஜா பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

செல்வராகவன் தமிழ் சினிமாவில் அனைவராலும் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை பாதிக்கட்டத்தில் செல்வாவின் கைகளுக்கு வந்தது. அதனையடுத்து தன்னுடைய பதின்ம வயதிலேயே எந்த வித பதற்றமுமின்றி அந்தப் படத்தை இயக்கி முடித்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் படத்துக்கு கைக்கொடுக்க ஓரளவு அடையாளப்பட்டது படம். தனுஷுக்கும் அந்தப் படம் ஓரளவுக்கு நல்ல அறிமுகத்தையே கொடுத்தது. அதேசமயம் சரியான அடல்ட் கன்டென்ட் என்கிற பெயரையும் அந்தப் படம் பெற்றது.

Dhanush Father Kasthuri Raja Open Talks about Selvaraghavan

காதல் கொண்டேன்: இரண்டாவது படமாக அவர் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படம்தான் தனுஷுக்குள் ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதையும், செல்வராகவனுக்குள் மிகச்சிறந்த இயக்குநர் இருக்கிறார் என்பதையும் வெளிச்சம் போட்டு காண்பித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவர் இயக்கிய பல படங்கள் இன்றுவரை கொண்டாடப்பட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவரது படம் என்றால் கண்டிப்பாக ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கும் என்றும் ரசிகர்கள் நம்பி தியேட்டர்களுக்கு செல்வார்கள்.

மகள் மீது பாசம்: இடையில் சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டு அவரை விவாகரத்து செய்த செல்வராகவன்; தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்குமான திருமணம் அன்போடு சென்றுகொண்டிருக்கிறது. அவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். மகளுடன் உச்சக்கட்ட பாசத்தில் இருப்பவர் செல்வராகவன். அவரை ஒருசிலர் அப்படி இப்படி என்று சொன்னாலும் நல்ல தகப்பனாக இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறார்.

கமலுடன் மோதல்?: முன்னதாக கமல் ஹாசனின் ஒரு படத்தை செல்வராகவன் இயக்குவதாக இருந்ததாகவும்; இரண்டு பேருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் வந்ததன் காரணமாக செல்வா அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் தகவல் ஓடுவதுண்டு. சூழல் இப்படி இருக்க சில பிரச்னைகளால் அவர் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். அதேசமயம் தனுஷின் கதையான நானே வருவேன் படத்தை செல்வாதான் இயக்கியிருந்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை.

Dhanush Father Kasthuri Raja Open Talks about Selvaraghavan

நடிப்பில் கவனம்: இயக்கத்தில் அவர் கொஞ்சம் சொதப்ப ஆரம்பித்தாலும், பீஸ்ட், பகாசூரன், சாணிக்காயிதம், மார்க் ஆண்டனி, ராயன் உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். அதேசமயம் மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்தவும் ஆரம்பத்திருக்கிறார். அந்தவகையில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் அறிவிப்பு வந்தது. ஆனால் அதற்கு பிறகு படத்தில் எந்தவித மூவ்மெண்ட்டும் இல்லை. இப்போது அவர் மென்ட்டல் மனதில் என்கிற படத்தை இயக்கிவருகிறார். கண்டிப்பாக இந்தப் படத்தில் இயக்குநராக கம்பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

கஸ்தூரி ராஜா பேட்டி: இந்நிலையில் செல்வராகவன் குறித்து அவரது தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா பேசுகையில், "செல்வராகவனை சிலரிடம் உதவி இயக்குநராக சேர்க்க முயற்சி செய்தேன். ஆனால் எனது மகன் என்பதாலேயே அவரை யாரும் சேர்த்துக்கொள்ளவில்லை. வாரிசுகள் கட்டாயமாக சினிமாவுக்கு வந்துதான் ஆக வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால் தலையெழுத்து இருந்தால் வந்துதான் ஆக வேண்டும்" என்றார்.

தனுஷின் பெர்சனல் வாழ்க்கை: தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்தார். அந்தப் படம்தான் தனுஷின் வாழ்க்கையில் பல விஷயங்களை பெற்றுக்கொடுத்தது. முக்கியமாக ரஜினிகாந்த்தின் மகளுடன் பழகுவதற்கான வாய்ப்பையும் வழங்கியது. இரண்டு பேருக்குமான அந்த பழக்கம் சில நாட்களிலேயே காதலாக மாறியது. இரண்டு பேரின் காதலுக்கும் கொஞ்சம் யோசனைக்கு பிறகு ரஜினியும், அவரது மனைவியும் சம்மதம் வழங்கினார்கள்.

பலருக்கு ஆச்சரியம்: சினிமாவுக்குள் வந்து வளர்ந்துகொண்டிருந்த சமயத்திலேயே ரஜினியின் வீட்டுக்கு தனுஷ் மருமகன் ஆனதை கண்டு பலர் ஆச்சரியமும், பலர் பொறாமையும் பட்டார்கள். இரண்டு பேரின் திருமணமும் கடந்த 2004ஆம் ஆண்டு சென்னையில் கோலாகலமாக நடந்தது. அதில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் உச்சக்கட்ட காதலோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தார்கள்.

பக்கா ஜோடி: முக்கியமாக தனுஷின் பேசும் விதம், நடை உடை பாவனை என அத்தனை மாறுவதற்கும் ஐஸ்வர்யா பக்கபலமாக இருந்தார். அதேபோல் ஐஸ்வர்யாவுக்குள் இருக்கும் இயக்குநர் ஆசையையும், எண்ணத்தையும் தெரிந்துகொண்ட தனுஷ்; 3 படத்தில் ஹீரோவாக நடித்தார். அடுத்ததாக வை ராஜா வை படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்தார். இவர்கள் இரண்டு பேருக்கும் யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படி கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்தார்கள் அவர்கள்.

பிரிவு: சூழல் இப்படி இருக்க திடீரென சில வருடங்களுக்கு முன்பு இரண்டு பேரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். அதில், 'தாங்கள் இரண்டு பேரும் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியேறுவதாகவும்; இரண்டு பேரும் தனித்தனி பாதையில் பயணிக்கவிருக்கிறோம்' என்று தெரிவித்தார்கள். அதேசமயம் நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு மனுத்தாக்கல் செய்யாமல் இருந்தார்கள். இதன் காரணமாக அவர்கள் கண்டிப்பாக இணைவார்கள் என்று கருதப்பட்டது.

விவாகரத்து: ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக கடந்த வருடம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தார்கள் அவர்கள். இரண்டு பேரையும் சேர்த்து வைக்க நீதிமன்றம் முயன்றாலும்; தங்களுக்கு டைவர்ஸ் வேண்டுமென்பதில் தனுஷும், ஐஸ்வர்யாவும் உறுதியாக இருந்ததால் அவர்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கியது நீதிமன்றம். இதற்கு பிறகு அவர்கள் இரண்டு பேரும் இரண்டாவது திருமணம் செய்துகொள்வார்களா இல்லை சிங்கிளாகவே இருப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரஜினிக்கு மன உளைச்சல்: குறிப்பாக தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்தது ரஜினிகாந்த்துக்கு உச்சக்கட்ட மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது. அவருக்கு போலவே கஸ்தூரி ராஜாவுக்கும் மன உளைச்சல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தனது உறவுக்கார பெண் ஒருவரை தனுஷுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க கஸ்தூரி ராஜா முடிவு செய்திருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தகவல் பரவிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X