ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது... தனுஷ் வெளியிட்ட மிகவும் சோகமான டிவீட்!
ஒரு சகாப்தம் முடிந்துவிட்டதாக நடிகர் தனுஷ் டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: ஒரு சகாப்தம் முடிந்து விட்டது என மிகவும் சோகமாக ஒரு டிவீட் வெளியிட்டுள்ளார் நடிகர் தனுஷ்.
சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர் இல்லையென்றாலும், அவ்வப்போது முக்கிய தருணங்களில் ஏதாவது பதிவு வெளியிடுவது தனுஷின் வழக்கம். அந்த வகையில், நேற்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

மிகவும் சோகமாக காணப்படும் அந்தப் பதிவில், "ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது" என தனுஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும், "கேம் ஆஃப் த்ரோன்ஸ் கடைசி சீசன் கடைசி எபிசோட் முடிவடைந்து விட்டது. மிகவும் பொழுதுபோக்காக புதுமையாக இதனை தந்தவர்களுக்கு மிகவும் நன்றி" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபலமான கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸ் முடிவடைந்ததைத் தான் தனுஷ் இப்படி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக 8 சீசன்களாக ஒளிபரப்பப் பட்டு வந்த இந்த சீரிஸ் தற்போது முடிவடைந்துள்ளது. உலகம் முழுவதும் இது தொடர்பாக ரசிகர்கள் சோகமான பதிவிட்டு வரும் நிலையில், தனுஷும் அப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
தனுஷின் இந்தப் பதிவைக் கண்ட அவரது ரசிகர்கள், 'அசுரன், பக்கிரி அப்டேட்கள் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்' என அவரிடம் கேட்டுள்ளனர். தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான தி எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த பகிர் படம் பக்கிரி என்ரா தலைப்பில் அடுத்த மாதம் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











