பாலிவுட்டில் துல்கர் ஜோடியாக தனுஷ் பட ஹீரோயின்!
Recommended Video

மும்பை : துல்கர் சல்மான் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பது நன்றாகவே தெரிகிறது. சமீப நாட்களாக துல்கர் சல்மானை பற்றிய செய்திகள் பாலிவுட்டில் அதிகமாக வருகின்றன. பாலிவுட்டில் தனது முதல் என்ட்ரியான 'கர்வான்' படத்தில் ஆகாஷ் குரானா இயக்கத்தில் ஏற்கனவே நடித்து முடித்துவிட்டார் துல்கர்.
அடுத்ததாக பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கும் 'மேன்மர்ஷியான்' படத்தில் நடிக்க இருக்கிறார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், அவருக்கு பதிலாக அபிஷேக் பச்சன் நடிக்கிறார் என அதிர்ச்சி தகவல் வெளியானது.

ஆனாலும் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவு திறப்பது போல அபிஷேக் சர்மா என்பவர் இயக்கவுள்ள புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கதாநாயகியாக 'ராஞ்சனா' புகழ் சோனம் கபூர் நடிக்கிறார்.
கிரிக்கெட் பின்னணியில் அனுஜா சௌகான் என்பவர் 2008-ல் எழுதிய 'தி சோயா பேக்டர்' என்கிற நாவலை தழுவி இந்தப்படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் கிரிக்கெட் அணியின் கேப்டனாக துல்கர் சல்மான் நடிக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











