சினிமா கம்பெனி தொடங்கிய தனுஷ் பட வில்லன்!
கொச்சின் : தமிழ் சினிமாவைப் போல மலையாள திரையுலகத்திலும் கூட ஓரளவு வளர்ந்த ஹீரோக்கள் தனியாக தயாரிப்பு நிறுவனம் துவங்கிவிடுவது வழக்கம் தான். ஜெயசூர்யா, நிவின்பாலி, ஆசிப் அலி ஆகியோர் தயாரிப்பாளர்களாக மாறிய வரிசையில் தற்போது இளம் நடிகரான டொவினோ தாமஸும் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார்.
தனுஷ் மலையாளத்தில் தயாரித்த 'தரங்கம்', தயாரிக்க இருக்கும் 'மரடோனா' ஆகிய படங்களில் ஹீரோவாகவும், தமிழில் தனுஷின் 'மாரி 2' படத்தில் வில்லனாகவும் நடிக்கும் டொவினோ தாமஸ், 'குப்பி கம்பெனி' என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார்.

அவர் நடிப்பில் வெளியான 'குப்பி' திரைப்படம் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத்தந்ததன் காரணமாக இந்தப் பெயரை அவர் வைத்துள்ளாராம். குப்பி பட இயக்குனரான ஜான் பால் ஜார்ஜும் இந்த நிறுவனத்தின் பங்குதாரராக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டொவினோ தாமஸ், அவர் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாது, புதிய இயக்குநர்களின் படங்களையும் தயாரிப்பார் என்று கூறப்படுகிறது. 'அபியும் அனுவும்' மற்றும் 'மாரி 2' படங்களின் மூலம் தமிழுக்கு வரும் டொவினோ தாமஸ் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெறுவார் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











