For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கர்ணன் மேல் தான் தனுஷின் கவனம்.. ஜகமே தந்திரம் படத்தை கை விட்டுட்டார் போல தெரியுதே.. என்ன ஆச்சு?

  |

  சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள கர்ணன் படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளது என்கிற அறிவிப்பை நடிகர் தனுஷ் தற்போது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

  ஆனால், ஜகமே தந்திரம் படத்தின் டீசர் வெளியானது குறித்து ஒரு ட்வீட் கூட தனுஷ் போடவில்லை.

  பிக்பாஸ் 5 போட்டியாளர்கள் லிஸ்ட் ரெடி...இளைஞர்களை கவர கவர்ச்சியும் ரெடி பிக்பாஸ் 5 போட்டியாளர்கள் லிஸ்ட் ரெடி...இளைஞர்களை கவர கவர்ச்சியும் ரெடி

  ஜகமே தந்திரம் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கும் நடிகர் தனுஷுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் இதற்கு காரணம் என்கின்றனர்.

  அதற்கு தயங்கமாட்டார்

  அதற்கு தயங்கமாட்டார்

  தங்களின் படங்களை சமூக வலைதளங்களில் புரமோஷன் செய்வதையே சில பிரபலங்கள் வேண்டாத வேலையாக கருதுவார்கள். ஆனால், நடிகர் தனுஷ் அப்படியெல்லாம் ஒரு போதும் நினைத்ததில்லை. தன்னுடைய படங்கள் மட்டுமின்றி, தனது நண்பர்களின் படங்கள், சிறு பட்ஜெட் படங்கள் என யார் கேட்டுக் கொண்டாலும் தயங்காமல் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் என பலவற்றையும் வெளியிட்டுள்ளார்.

  நடிப்பு அசுரன்

  நடிப்பு அசுரன்

  இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. தனது ட்விட்டர் பக்கத்திலேயே அசுரன்/ நடிகர் என போட்டுக் கொண்டார் தனுஷ். ஈஸ்வரன் படத்தி சிம்பு பேசிய வசனம் சர்ச்சையை கிளப்பவே தனுஷ் அதை போட்டதாகவும் பலர் கருதினர்.

  கர்ணன் மீது கவனம்

  கர்ணன் மீது கவனம்

  வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவுள்ள கர்ணன் படத்தின் மீது தான் தற்போது நடிகர் தனுஷின் முழு கவனமும் இருக்கிறது. ஹாலிவுட்டில் தி கிரே மேன் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும், கர்ணன் படத்தின் பாடல்களை வெளியிடுவது, அந்த படத்திற்கு புரமோஷன் செய்வது என மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார் தனுஷ்.

  விரைவில் டீசர்

  விரைவில் டீசர்

  இந்நிலையில், தற்போது கர்ணன் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என ட்வீட் போட்டு ரசிகர்களை கர்ணனின் தரிசனத்தை காண தூண்டி விட்டுள்ளார். கர்ணன் படத்தின் கண்டா வர சொல்லுங்க, பண்டாரத்தி புராணம் என இரு பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில், டீசர் வெளியானால் மிகப்பெரிய அதிர்வலையை தமிழ் சினிமாவில் உருவாக்கும் என்பது நிச்சயம்.

  கண்டு கொள்ளவில்லை

  கண்டு கொள்ளவில்லை

  ஆனால், மறுபக்கம் நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாகவுள்ள ஜகமே தந்திரம் படத்தை பற்றி நடிகர் தனுஷ் பெரிதாக கண்டு கொள்ளாத மாதிரியே தெரிகிறது. அதற்கு வலுவான சில காரணங்களும் உள்ளதாக கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் டீசரை கூட தனுஷ் வெளியிடாதது குறிப்பிடத்தக்கது.

  தயாரிப்பு தரப்புடன் மோதல்

  தயாரிப்பு தரப்புடன் மோதல்

  ஜகமே தந்திரம் படம் ஒடிடியில் வெளியாகும் என்கிற உறுதியான தகவல் வந்த போது தனுஷ் ரசிகர்கள் ரொம்பவே கொதித்துப் போனார்கள். தியேட்டரில் ரிலீசாகும் என நம்புகிறேன் என நடிகர் தனுஷும் ட்வீட் போட்டார். ஆனால், அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு விற்று விட்டது. அது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

  ரசிகர்களுக்கு ஹேப்பி தான்

  ரசிகர்களுக்கு ஹேப்பி தான்

  ஒடிடியில் ஜகமே தந்திரம், தியேட்டரில் கர்ணன் என அடுத்தடுத்து இரண்டு தனுஷ் படங்களை கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது தனுஷ் ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயம் தான். மேலும், ருசோ சகோதரர்கள் இயக்கும் ஹாலிவுட் படமான தி கிரே மேன், பாலிவுட் படமான அட்ரங்கி ரே, கார்த்திக் நரேனின் டி43, செல்வராகவனின் நானே வருவேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 என ரசிகர்களை நடிப்பால் திணறடிக்க காத்திருக்கிறார் தனுஷ்.

  English summary
  Actor Dhanush announced Karnan teaser will arrive soon in his twitter handle. Also Dhanush fully focused on Karnan release only and not Jagame Thandhiram.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X