யோவ் போயா.. என்ன பிரயோஜனம்? என்னோட வெற்றிக்கு காரணம் ஐஸ்வர்யாவா? கடுப்பை கன்ட்ரோல் செய்த தனுஷ்

சென்னை: நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் அங்கம் வகிக்காத துறைகள் என எடுத்துக் கொண்டால், மிகக் குறைவுதான். அந்த அளவுக்கு செம பிஸியான சினிமாகாரராக வலம் வந்து கொண்டு உள்ளார். நடிகராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய தனுஷ், அதன் பின்னர் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர், கதை ஆசிரியர், வசனகர்த்தா என பல அவதாரங்களை எடுப்பது மட்டும் இல்லாமல், தான் கால் பதித்த இடங்களில் எல்லாம், முத்திரை பதித்து வருகின்றார். இவரது சொந்த வாழ்க்கை குறித்து பலருக்கும் தெரிந்தது. இப்படியான நிலையில் தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து இவர் பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் இட்லி கடை. இதன் ரிலீஸ் தேதியையும் படக்குழு தெரிவித்துவிட்டது. இந்தப் படத்தை அவரே கதை திரைக்கதை எழுதி, இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அருண் விஜய், நித்யா மேனன், ராஜ் கிரண் என பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் தனுஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

dhanush aishwarya rajinikanth

இதற்கு முன்னர் இவரது இயக்கத்தில் வெளியாகவுள்ள படம், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள இந்தப் படம், வரும் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. காதலர் தினத்தில் படத்தினை ரிலீஸ் செய்யலாம் என படக்குழு எதிர்பார்த்தது. ஆனால், பிப்ரவரி 6ஆம் தேதி, அஜித் குமாரின் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆவதால், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ரிலீஸ் தேதியை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

தனுஷ்: ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பும் உள்ளது. இதுமட்டும் இல்லாமல், தனுஷ் நடிப்பில், குபேரா படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படியான நிலையில் தனுஷ், பழைய பேட்டி ஒன்றில் தனது முன்னாள் மனைவி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

dhanush aishwarya rajinikanth

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: அதாவது அந்தப் பேட்டியில், தனுஷிடம் கேள்வி கேட்கும்போது, உங்களது வெற்றிக்குப் பின்னால் உங்களது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளார் என கூறப்படுகின்றது. இதனைக் கேட்ட தனுஷ் சிரித்துக் கொண்டே விவேக்கை நோக்கி, " பார்த்தீங்களா சார், நாம கஷ்டப்பட்டு, வாயக் கட்டி வயித்துக் கட்டி, நடிச்சுட்டும், கஷ்டப்பட்டு டான்ஸ் ஆடிட்டும் வருவோம், உடனே உங்க வெற்றிக்குப் பின்னாடி ஒரு பொண்ணு இருக்கா.. அதனாலதான்னு சொல்லிடறாங்க. பின்னாடி இருந்து யாருக்கு என்ன பிரயோஜனம்? யோவ் போயா" என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். இது பழைய பேட்டி என்றாலும், இப்போது இணையத்தில் இது தொடர்பான வீடியோ, இணையவாசிகள் மத்தியில் உலா வருகின்றது.

dhanush aishwarya rajinikanth

விவாகரத்து: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியைக் கொடுத்தது. இருவருக்கும் கடந்த ஆண்டு விவாகரத்து அளிக்கப்பட்டது. இவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் தங்களது பெற்றோர்களின் கவனிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

dhanush aishwarya rajinikanth

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X