கட்டா குஸ்தி இயக்குநருக்கு அடித்த ஜாக்பாட்... தனுஷுடன் பிரம்மாண்ட கூட்டணி?

சென்னை: செல்ல அய்யாவு இயக்கிய கட்டா குஸ்தி திரைப்படம் கடந்தாண்டு டிசம்பரில் வெளியானது.

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்திருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மினிமம் பட்ஜெட்டில் உருவான கட்டா குஸ்தி 50 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கட்டா குஸ்தி இயக்குநர் செல்ல அய்யாவு தனது அடுத்த படத்தில் தனுஷுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 Dhanush: Gatta Kusthi director Chella Ayyavu is said to be teaming up with Dhanush

தனுஷின் புதிய கூட்டணி : தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் மாதமும், டீசர் ஜூலையில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தனுஷ் லைன்-அப்பில் பல படங்கள் உள்ளன.

இந்நிலையில், கட்டா குஸ்தி இயக்குநர் செல்ல அய்யாவு தனுஷுடன் ஒரு படத்தில் இணையவுள்ளாராம். விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் கடந்தாண்டு டிசம்பரில் வெளியானது. வித்தியாசமான ஜானரில் காமெடியாக வெளியான கட்டா குஸ்தி படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதேபோல், மினிமம் பட்ஜெட்டில் உருவான கட்டா குஸ்தி, 50 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், இயக்குநர் செல்ல அய்யாவுக்கு முன்னணி நடிகர்களிடம் இருந்து ஆஃபர்கள் வந்தன. இந்நிலையில் தான் நடிகர் தனுஷும் செல்ல அய்யாவு இடம் கதை கேட்டுள்ளதாக தெரிகிறது. அதன்பின்னர் செல்ல அய்யாவு சொன்ன கதை பிடித்துப் போனதால் தனுஷும் ஓக்கே சொல்லிவிட்டாராம்.

 Dhanush: Gatta Kusthi director Chella Ayyavu is said to be teaming up with Dhanush

அதன்படி, தனுஷ் - செல்ல அய்யாவு கூட்டணி இணைவது உறுதி என்றும், இந்தப் படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவும் திட்டமிட்டு வருகிறார்களாம். கட்டா குஸ்தியில் இயக்குநராக அறிமுகமான செல்ல அய்யாவு, அடுத்தப் படத்திலேயே தனுஷுடன் பிரம்மாண்டமான கூட்டணியில் இணைவது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்டு சேகர் கம்முலா இயக்கும் படம், D 50, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார் தனுஷ். இதன் காரணமாக செல்ல அய்யாவு இயக்கத்தில் நடிக்கும் படம் குறித்தும், அதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது பற்றியும் மெதுவாக தான் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. அதேபோல், தனுஷ் - செல்ல அய்யாவு கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X