»   »  எனக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்துவிட்டவர் தனுஷ்: சிவகார்த்திகேயன்

எனக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்துவிட்டவர் தனுஷ்: சிவகார்த்திகேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
தனுஷ் தான் என்னை வளர்த்துவிட்டவர்: சிவகார்த்திகேயன்-வீடியோ

சென்னை: ஹீரோக்களின் நண்பனாகும் வாய்ப்பை எதிர்பார்த்த எனக்கு வாய்ப்பு அளித்து நடிகர் தனுஷ், இயக்குனர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் வளர்த்துவிட்டனர் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வந்து பெரியதிரையில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார் சிவகார்த்திகேயன். அவரின் அதிவேக வளர்ச்சியை பார்த்து கோலிவுட் வியப்பில் உள்ளது.

இந்நிலையில் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசியதாவது,

நண்பன்

நண்பன்

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது பெரிய ஹீரோவாக ஆகும் எண்ணம் எனக்கு இல்லை. விஜய், அஜீத் போன்ற ஹீரோக்களின் நண்பனாக நடித்தால் மட்டும் போதும் என கருதினேன்.

பாண்டிராஜ்

பாண்டிராஜ்

ஹீரோக்களின் நண்பனாகும் வாய்ப்பை எதிர்பார்த்த எனக்கு வாய்ப்பு அளித்து நடிகர் தனுஷ், இயக்குனர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் வளர்த்துவிட்டனர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

சின்னத்திரையில் இருந்து யார் சினிமாவுக்கு வந்தாலும் சிவகார்த்திகேயன் போன்று வளர்ந்துவிடுவார் என்று பிறர் கூறுவதை கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

முன்னேற்றம்

முன்னேற்றம்

கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினாலே வாழ்க்கையில் முன்னேறலாம். உங்களின் மனம் சொல்வதை கேட்டு நடந்தாலே போதும் என்றார் சிவகார்த்திகேயன்.

அனிருத்

அனிருத்

சிவகார்த்திகேயன், அனிருத்தை வாய்ப்பு கொடுத்து வளர்த்துவிட்டார் தனுஷ். ஆனால் தற்போது தனுஷ் சிவகார்த்திகேயன், அனிருத்துடன் சேர்ந்து பணியாற்றுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sivakarthikeyan said that people like Dhanush, director Pandiraj gave him chance and paved way for his growth in Kollywood.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil