3 கேர்ள்ஃபிரெண்ட்.. ராயல் என்ஃபீல்ட்ல டெலிவரி பாய் வேலை.. தனுஷை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: வேலையில்லா பட்டதாரி படத்தில் அந்த சைக்கிள் போல இருந்த ஓட்ட பைக் ரசிகர்களை அப்படி கவர்ந்தது.
ஆனால், தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் டெலிவரி பாயாக தனுஷ் நடித்துள்ள நிலையில், அவர் ஓட்டி வரும் ராயல் என்ஃபீல்ட் பைக்கை பார்த்து நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்த டிசாஸ்டர் லோடிங் என்றும் இப்பவே ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

தனுஷின் திருச்சிற்றம்பலம்
திருடா திருடியில் தொடங்கி படிக்காதவன், மாப்பிள்ளை, உத்தமப்புத்திரன், யாரடி நீ மோகினி, வேலையில்லா பட்டதாரி, பட்டாசு என ஏகப்பட்ட காமெடி படங்களிலும் தனுஷ் நடித்து ரசிகர்களை கலகலப்பாக்கி வருகிறார். அந்த வரிசையில் குடும்பத்தோடு கண்டுகளிக்கும் விதமாக இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் அடுத்த வாரம் ஆகஸ்ட் 18 திரைக்கு வருகிறது.

வேலையில்லா பட்டதாரி மொஃபா ஸ்கூட்டர்
யாரடி நீ மோகினி படத்தில் அப்பா ரகுவரனின் பஜாஜ் ஸ்கூட்டரை அவர் இறந்த பின்னர் மீண்டும் வாங்கி வந்து ஓட்டி ரசிகர்களை உருக வைத்திருப்பார் தனுஷ். பொல்லாதவன் படத்தையே பல்சர் பைக்கை வைத்து உருவாக்கி இருப்பார் வெற்றிமாறன். வேலையில்லா பட்டதாரி படத்தில் மொஃபா ஸ்கூட்டர் எனும் டிவிஎஸ் 50க்கும் முந்தைய மாடல் பைக்கை ஓட்டிக் கொண்டு பெட்ரோல் இல்லையென்றால் கூட பெடல் பண்ணிட்டே போயிடுவேன்னு அமலா பாலிடம் சொல்லும் காட்சிக்கு எல்லாம் இன்னமும் ரசிகர்கள் உள்ளனர்.

ராயல் என்ஃபீல்டில் டெலிவரியா
இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷ் ராயல் என்ஃபீல்ட் பைக்கில் உணவு டெலிவரி செய்யும் பாயாக நடித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். எளிமை, ஏழ்மை என காட்ட வேண்டிய நிலையில், ராயல் என்ஃபீல்டு எங்கிருந்து வந்தது என கிண்டல் அடித்து வருகின்றனர்.

3 கேர்ள் ஃபிரெண்ட்
ராயல் என்ஃபீல்டு மட்டுமின்றி நித்யா மேனன், ராஷி கன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் என மொத்தம் 3 கேர்ள் ஃபிரெண்ட் வேற இந்த படத்தில் தனுஷுக்கு என பங்கமாக கலாய்த்து வருகின்றனர். வேலையில்லா பட்டதாரி படத்தில் கால் சென்டர் வேலைக்கே 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிய ஆளாச்சே தனுஷ் என்றும் வச்சு செய்து வருகின்றனர்.

அப்பா போலீஸ்
திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் ஒன்றும் ஏழை வீட்டுப் பையனெல்லாம் இல்லைங்க, அப்பா பிரகாஷ் ராஜ் போலீஸ் பெரிய போஸ்ட். ஆனால், அப்பா காசு நம்பி இல்லாமல் தனுஷே தனியாக டெலிவரி பாய் வேலை பார்த்து தனது லட்சியத்தை அடையலாம் இல்லையா, படம் வருவதற்கு முன்பாக இப்படி கலாய்க்க வேண்டாம் என தனுஷ் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த படமாவது ஓடுமா
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடைசியாக வந்த அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் மற்றும் பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெறாத நிலையில், தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படமாவது ஓடுமா என்றும், தனுஷின் படங்கள் எல்லாம் ஓடிடியில் வெளியாகி தோல்வி அடைந்த நிலையில், திருச்சிற்றம்பலம் அவருக்கு கம்பேக் கொடுக்குமா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











