தனுஷின் பிரம்மாண்ட போயஸ் கார்டன் பங்களா.. யாருக்கு கிப்டா சொடுத்திருக்காரு தெரியுமா?

சென்னை : நடிகர் தனுஷ் தன்னுடைய நடிப்பை கோலிவுட்டில் மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், ஹாலிவுட் வரை விரிவுப்படுத்தியுள்ளார்.

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்த படங்களில் நடித்துவந்த தனுஷ், தற்போது டோலிவுட்டிலும் தன்னுடய என்ட்ரியை கொடுத்துள்ளார்.

அவரது திருச்சிற்றம்பலம், வாத்தி படங்கள் அடுத்தடுத்து அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளன.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தான் ஒரு நடிகனாக பார்க்கப்படுவதையே தான் விரும்புவதாகவும் கோலிவுட்டில் தன்னுடைய நடிப்பை சுருக்கிக் கொள்ள தான் விரும்பவில்லை என்றும் அவர் தனது பேட்டிகளில் கூறி வருகிறார்.

டோலிவுட்டில் என்ட்ரி

டோலிவுட்டில் என்ட்ரி

இந்நிலையில் சமீபத்தில் டோலிவுட்டிலும் அவர் தனது என்ட்ரியை கொடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது வாத்தி மற்றும் சார் படங்கள், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியானது. இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். படம் தமிழை காட்டிலும் தெலுங்கில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

கேப்டன் மில்லர் படத்தில் பிசி

கேப்டன் மில்லர் படத்தில் பிசி

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் படத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது டி50 படத்தை இயக்கி நடிக்கவுள்ளார் தனுஷ். இந்தப் படத்தின் அறிவிப்பை கடந்த சில வாரங்களுக்கு முன்பு சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

போயஸ்கார்டன் பங்களா

போயஸ்கார்டன் பங்களா


தொடர்ந்து தெலுங்குப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்திலும் கமிட்டாகியுள்ள தனுஷ், வாழ்க்கையில் தற்போது மிகப்பெரிய சிறப்பான நிகழ்வு நடைபெற்றுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு அருகில் போயஸ்கார்டனில் அவர் தனது புதிய வீட்டின் கிரஹபிரவேசத்தை கடந்த மகா சிவராத்திரி அன்று அவர் நடத்தி முடித்துள்ளார்.

ரூ.150 கோடியில் பிரம்மாண்டம்

ரூ.150 கோடியில் பிரம்மாண்டம்

கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பூமி பூஜை போடப்பட்டு வேலைகள் துவங்கப்பட்ட இந்த வீடு 19000 சதுரஅடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டை கட்டி முடிக்க 150 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சில பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து இந்த வீட்டிற்காக தனுஷ் பயன்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

மிகவும் பிரம்மாண்டமான அளவில் தனுஷ் கட்டியுள்ள இந்த வீட்டிற்கு அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தனுஷின் ரசிகர் ராஜா, அவரை சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டு மனிதன் என்பவன் தெய்வமாகலாம். நன்றி சார் என்று கூறியுள்ளார்.

பெற்றோருக்கு பரிசு

பெற்றோருக்கு பரிசு


இதனிடையே, தான் ஆசை ஆசையாக பார்த்து பார்த்து கட்டிய இந்த வீட்டை தன்னுடைய பெற்றோருக்கு பரிசாக கொடுத்துள்ளாராம் தனுஷ். இதையடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. விரைவில் அவரது இயக்கத்தில் டி50 படத்தின் வேலைகளையும் அவர் துவக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X