Dhanush: நயன்தாராவுக்கு விருது விழாவில் பதிலடி கொடுத்த தனுஷ்.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இடையே கோலிவுட்டில் மிகப்பெரிய பனிப்போர் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற வந்த நிலையில், கடந்த மாதம் அது நயன்தாராவின் பதிவுக்கு பிறகு பொதுவெளியில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. நடிகர் தனுஷ் ஓம் நமச்சிவாயா என சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றி வருகிறார் என்றும் போலி முகமுடியை போட்டுக் கொண்டு நடிக்கிறார். உண்மையில், அவருக்கு அன்பு மற்றும் அமைதி என்றால் என்னவென்றே தெரியாது என ஜெர்மனி வார்த்தையெல்லாம் போட்டு திட்டியிருந்தார்.
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல் ஆவணப்படத்தில் 3 நொடிகள் இல்லாமல் 30 நொடிகளுக்கும் மேல் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகள் இடம்பெற்றிருந்ததை பார்த்து தனுஷ் ரசிகர்கள் ஷாக் ஆனார்கள். இதற்கு எதிராக தனுஷ் ஆக்ஷன் எடுக்க வேண்டும் என பதிவிட்டு வந்தனர்.

நடிகர் தனுஷின் வழக்கறிஞர் தரப்பில் இருந்து நயன்தாரா மீதும் நெட்பிளிக்ஸ் மீதும் வழக்கு தொடரப்பட்டது. எந்தவொரு விதியையும் மீறவில்லை என நயன்தாரா தரப்பு கோர்ட் நோட்டீஸுக்கு பதில் அனுப்பியது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் கணக்கையே டெலிட் செய்து விட்டார் என்றும் ரசிகர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.
தனுஷுக்கு விருது: நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் தனுஷுக்கு அம்ரித் ரத்னா 2024 விருது வழங்கப்பட்டது. பிடி உஷா தனுஷுக்கு விருது வழங்கினார். இட்லி கடை படத்தின் படப்பிடிப்பை முடித்த தனுஷ் அடுத்து நடிக்கப் போகும் இந்தி படத்துக்காக மீண்டும் ராஞ்சனா படத்தில் நடித்தது போல இளமையாக மாறிவிட்டார். அவரது புதிய லுக்கை பார்த்தே தனுஷ் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போயிருக்கும் நிலையில், நேற்று நடைபெற்ற விருது விழாவில் தனுஷ் பேசியதும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நயன்தாராவுக்கு பதிலடி: "ஓம் நமச்சிவாயா" எனக் குறிப்பிட்டு தனுஷுக்கு எதிராக நயன்தாரா கடிதம் எழுதியிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற விருது விழாவில் விருதினை பெற்ற தனுஷ் பேசும் போது, "ஓம் நமச்சிவாயா" என்று சொல்லிவிட்டே தனது பேச்சைத் தொடங்கினார். அவரது பேச்சை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வரும் ரசிகர்கள் நயன்தாராவுக்கு தலைவன் தரமான பதிலடி கொடுத்துள்ளார் என்றும் தொடர்ந்து அடி கன்ஃபார்மா இருக்கும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
கொலவெறி விளக்கம்: அந்த விருது விழாவில் தனுஷின் கொலவெறி பாடல் குறித்த கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இன்று வரை அந்த பாடல் என்னை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது என்றும் எப்படி நாங்க அந்த பாடலை உருவாக்கினோம் என்றே தெரியவில்லை என பதிலளித்த தனுஷ் தனது ரசிகர்களுக்காக சில வரிகள் அந்த பாடலை மேடையில் பாடி அசத்தினார்.

வரிசையாக படங்கள்: நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு கேப்டன் மில்லர் மற்றும் ராயன் உள்ளிட்ட 2 படங்கள் வெளியாகின. அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் உள்ளிட்ட படங்களும் குபேரா படமும் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. தனுஷின் இளையராஜா பயோபிக் படம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், இந்தி படத்திலும் அடுத்து தனுஷ் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து: 2022ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த தனுஷின் விவாகரத்து வழக்கு கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. குடும்ப நல நீதிமன்றம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











