செஞ்சிருவேன்னு டயலாக் சொல்றது மாஸ் இல்ல.. அப்ப எது மாஸ்.. தனுஷ் சொல்லியிருக்கறத பாருங்க!
சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
Recommended Video
இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் தனுஷ், அனிருத் இருவரும் மேடையில் இசைக்கச்சேரி நடத்தினர்.

திருச்சிற்றம்பலம் படம்
நடிகர் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார்.

இசை வெளியீட்டு நிகழ்ச்சி
இதனிடையே நேற்றைய தினம் தனியார் கல்லூரி ஒன்றில் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மட்டுமின்றி ஏராளமான திரைநட்சத்திரங்களும் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கு நடிகை நித்யா மேனன், வீல் சேரில் வந்திருந்தார். அவரது காலில் லேசான அடிபட்டதாக கூறப்பட்டது.

இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்பு
நடிகர் தனுஷுடன் இணைந்து ஆடுகளம், அசுரன், பொல்லாதவன் உள்ளிட்ட படங்களை கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சி ஹாலிவுட் ரேஞ்சுக்கு ரெட் கார்பெட் போடப்பட்டு நடைபெற்றது. விழா அரங்கத்திற்கு வெளியில் தனுஷ் நடிப்பில் வெளியான படங்களின் போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.

ரசிகர்கள் கரகோஷம்
நிகழ்ச்சியில் பேசவந்த நடிகர் தனுஷ், உடனடியாக பேச முடியாதபடி அவரது ரசிகர்கள், தலைவா என்று முழக்கமிட்டனர். தொடர்ந்த பேசிய தனுஷ் இந்த சத்தத்தை கேட்டு ஒன்றரை வருடங்கள் ஆகிறது என்று குறிப்பிட்டார். மேலும் திரையரங்கில் தன்னுடைய படம் வெளியாகி ஒன்றரை வருடங்கள் ஆவதாகவும் தெரிவித்தார்.

தனுஷ் நெகிழ்ச்சி
தொடர்ந்து பேசிய அவர் தன்னுடைய அப்பா தனது ஹீரோ என்று தெரிவித்தார். செஞ்சிருவேன்னு டயலாக் சொல்லி ஸ்டைலா நடந்து வர்றது மாஸ் இல்ல என்று குறிப்பிட்ட தனுஷ், அப்பா, அம்மாவை கடைசி வரைக்கும் நல்லா பார்த்துக்கறதுதான் மாஸ் என்றும் தெரிவித்தார்.

ரசிகர்கள் ஆரவாரம்
இந்த நிகழ்ச்சியில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு தனுஷ் படத்திற்கும் அவருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்தனர். நிகழ்ச்சியில் தனுஷ் பேசியபோது ரசிகர்கள் அவரை பேசவிடாதபடி தொடர்ந்து கரகோஷங்களை எழுப்பினர்.


Click it and Unblock the Notifications











