Dhanush: நயனை விடுங்க.. 150 நடிகைகளுக்கு தனுஷ் தொல்லையாம்.. சுசித்ரா பேச்சினால் ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை: நேற்று அதாவது நவம்பர் 17ஆம் தேதி மதியத்தில் இருந்து தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது நடிகை நயன்தாரா பெரும் கோபத்துடன் நடிகர் தனுஷ்க்கு எழுதிய கடிதம்தான். அந்தக் கடிதத்தில் தனுஷ்ஷினால் தானும் தனது கணவர் விக்னேஷ் சிவனும் மன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் துறை ரீதியாகவும் எந்த அளவுக்கு பாதிப்புகளை எதிர்கொண்டோம் எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது திருமண டாக்குமெண்டரி வெளியிட தனுஷ் எந்த அளவுக்கு நெருக்கடி கொடுத்தார் என தனது ஆதங்கத்தினையும் வெளிப்படுத்தினார். இந்நிலையில் இது தொடர்பாக பின்னணி பாடகியும் யூடியூபருமான சுசித்ரா தெரிவித்துள்ள கருத்து பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

நடிகை நயன்தாரா நானும் ரௌடி தான் படத்தில் நடிக்கும்போது, படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது காதல் ஏற்பட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலில் இருந்த இவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் இந்தியாவே திரும்பிக் பார்க்கும் வகையில் நடைபெற்றது. திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

dhanush nayanthara suchitra

தனது திருமணத்தை மைய்யப்படுத்தி ஒரு டாக்குமெண்டரியை உருவாக்க நயன் திட்டமிட்டு, அதனை இயக்கும் பணியை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கரங்களில் ஒப்படைத்தார். திருமணம் முடிந்து சில மாதங்களுக்குள் அந்த டாக்குமெண்டரி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டாக்குமெண்டரி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ரிலீஸ் ஆகவில்லை. நாளை அதாவது நவம்பர் 18ஆம் தேதி டாக்குமெண்டரி ரிலீஸ் ஆகவுள்ளது.

dhanush nayanthara suchitra

சுசித்ரா: இந்நிலையில் இந்த டாக்குமெண்டரியை ரிலீஸ் செய்வதில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு தனுஷ் பெரும் நெருக்கடியைக் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பின்னணிப் பாடகியும் பிரபல யூடியூபருமான சுசித்ரா தெரிவித்துள்ள கருத்து பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அதாவது பேட்டி ஒன்றில் அவர் பேசியது, " தனுஷ்ஷினால் இன்னல்களைச் சந்தித்தவர் நயன்தாரா மட்டும் இல்லை. நயன்தாராவுக்கு இப்போது சப்போர்ட் செய்கின்ற பல நடிகைகளுக்கு இதுபோன்ற தொல்லையை தனுஷ் கொடுத்துள்ளார்.

dhanush nayanthara suchitra

150 நடிகைகள்: இன்னும் சொல்லப்போனால், தனுஷ் உடன் நடித்த முதல் படத்தின் நடிகைகளுக்கும் இதுபோன்ற தொல்லை தனுஷ் கொடுத்துள்ளார். அதுவும் எப்படி என்றால், தனது அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகளுக்கும் தொல்லை கொடுத்துள்ளார். தனுஷ் 50 படங்களில் நடித்துள்ளார். அப்படியானால் ஒரு படத்திற்கு 3 நடிகைகள் வீதம் மொத்தம் 150 நடிகைகளுக்கு தனுஷ் தொல்லை கொடுத்துள்ளார்.

dhanush nayanthara suchitra

தொல்லை: இதில் சிலருக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்திருப்பார், சிலருக்கு தொழில் ரீதியான தொல்லை கொடுத்திருப்பார், சில நடிகைகளுக்கு அவரது இமேஜினை டேமேஜ் செய்யும்படி தனுஷ் நடந்து கொள்வார். பர்ஷ்னல் ரீதியாகவும் தொல்லை கொடுப்பார். தனுஷ் ஒரு சைக்கோ என்பதால் எல்லா வகையிலும் தொல்லை கொடுப்பார் எனக்ன் கூறியுள்ளார். இது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதேநேரத்தில் இவரது இந்தக் கருத்து தனுஷ்ஷின் மீது இவருக்கு ஏற்கனவே உள்ள காழ்ப்புணர்ச்சியால் இவ்வாறு கூறுகின்றார் எனவும் பேச்சுகள் அடிபடுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X