சூட்டிங் துவங்கி நிறுத்தப்பட்ட வடசென்னை 2.. என்னதாங்க ஐடியா.. தனுஷ் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா!

சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அட்ராங்கி ரே, ஜகமே தந்திரம், மாறன் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகின.

இந்தப் படங்களுக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்த நிலையில், ஒரு சூப்பர் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தனுஷ் காணப்படுகிறார்.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் 2 படங்களில் நடித்து முடித்துவிட்டார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் குறைந்த இடைவெளிகளில் வெளியானவண்ணம் உள்ளன. நடிப்பின்மீது அதிக காதல் கொண்டவராக காணப்படும் தனுஷ், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இயக்குநராகவும் வெற்றி

இயக்குநராகவும் வெற்றி

இயக்கத்தில் கால்பதித்து ப. பாண்டி படத்தை ரசிகர்களுக்கு சிறப்பான வகையில் கொடுத்திருந்தார் தனுஷ். பாடல்கள் எழுதுவது, பாடுவது, தயாரிப்பது என அடுத்து தன்னை அப்டேட் செய்து வருகிறார். நடனத்திலும் இவரை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்று சொல்லலாம்.

நடிப்பு அசுரன் தனுஷ்

நடிப்பு அசுரன் தனுஷ்

நடிப்பில் அசுரனாகவும் இவர் தன்னை நிரூபித்துள்ளார். தொடர்ந்து ஸ்டூடண்டாகவும் நடிக்கிறார். வயதான கேரக்டர்களிலும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். திடீரென பார்த்தால் ஹாலிவுட்டிலேயே வில்லன் கேரக்டரில் நடித்து அசத்துகிறார். சமீபத்தில் வெளியான தி க்ரே மேன் ஹாலிவுட் படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லன் கேரக்டர் அனைவரையும் அசத்தியது.

திருச்சிற்றம்பலம் ரிலீஸ்

திருச்சிற்றம்பலம் ரிலீஸ்

தொடர்ந்து அடுத்ததாக ரூசோ சகோதரர்கள் இயக்கத்திலேயே மீண்டும் ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழிலும் இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் அடுத்த மாதத்தில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

திரையரங்குகளில் ரிலீசாகும் திருச்சிற்றம்பலம்

திரையரங்குகளில் ரிலீசாகும் திருச்சிற்றம்பலம்

இவரது அடுத்தடுத்த படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்நிலையில், நீண்ட நாட்களாக தனுஷ் ரசிகர்கள் வடசென்னை 2 படம் குறித்த அப்டேட்டை கேட்டு வருகின்றனர்.

விரைவில் வடசென்னை 2

விரைவில் வடசென்னை 2

இதனிடையே சமீபத்தில் இதுகுறித்து ரசிகர்களுக்கு பதிலளித்த தனுஷ், வடசென்னை படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு 50 நாட்கள் எடுக்கப்பட்ட நிலையில், தனது அடுத்தடுத்த படங்களில் வெற்றிமாறன் பிசியானதால் இந்தப் படத்தின் சூட்டிங் தடைப்பட்டதாகவும் விரைவில் வெற்றிமாறன் தனது கமிட்மெண்ட்களை முடித்துக் கொண்டு வடசென்னை 2 படத்தை இயக்குவார் என்றும் தனுஷ் கூறியுள்ளார்.

வடசென்னை சூட்டிங்

வடசென்னை சூட்டிங்

அவர் அவ்வாறு வடசென்னை படத்தை இயக்க வந்தால், தான் உடனடியாக அந்தப் படப்பிடிப்பில் இணைந்து விடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2018ல் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, அமீர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான வடசென்னை படம் வித்தியாசமான கதைக்களத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X