கவுதம் மேனன் படத்தில் தனுஷ்?

சமீபத்தில் கவுதம் மேனனைச் சந்தித்த தனுஷ், படத்தில் நடிப்பதற்கான தன் சம்மதத்தைத் தெரிவித்தாராம்.
தனுஷ் கைவசம் இப்போது இரு படங்கள் உள்ளன. ஒன்று பரத்பாலா இயக்கத்தில். இன்னொன்று சிம்புதேவன் படம்.
அடுத்த படம் கவுதம் மேனனுக்கு என்கிறார்கள்.
கவுதம் மேனன் தற்போது ஜீவா, சமந்தா நடிப்பில் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தினை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து விஜய்-ஐ வைத்து 'யோஹன்' படத்தை இயக்க இருக்கிறார்.
இந்தப் படங்களை முடித்ததும் அவர் தனுஷ் படத்துக்கு வந்துவிடுவாராம்.
இப்படத்தின் ஹீரோயின், தயாரிப்பாளர், வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனாலும் ஒருவரை மட்டும் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்... அவர் கொலைவெறி இசையமைப்பாளர் அனிருத்!
Comments


Click it and Unblock the Notifications