ஜி.வி. பிரகாஷ் மியூசிக் போட, தனுஷ் ட்ரெய்லர் விட, அடடே அடடே
சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார், தனுஷ் ரொம்பவே ராசியாகிவிட்டனர்.
ஜி.வி. பிரகாஷ் குமாருக்கும், தனுஷுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தார்கள். தனுஷை பிரிந்த பிறகு உங்கள் நிலைமை எவ்வளவு மோசமாகவிட்டது என்று பார்த்தீர்களா என்று நெட்டிசன் ஒருவர் ஜி.வி.யிடம் கேட்க அவரோ, அவரை பிரிந்த பிறகு தான் ஹீரோவானேன் என் சிப்ஸு என்று பதில் அளித்தார்.
இந்நிலையில் பழையதை எல்லாம் மறந்துவிட்டு தனுஷும், ஜி.வி. பிரகாஷும் ராசியாகிவிட்டார்கள்.

ஜி.வி. பிரகாஷ்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடித்து வரும் அசுரன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் தான் இசையமைக்கிறார். ஜி.வி. பிரகாஷ் நிச்சயம் வித்தியாசமான பாடல்களை கொடுத்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ்
ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள சர்வம் தாளமயம் படத்தின் ட்ரெய்லரை தனுஷ் இன்று மாலை வெளியிட்டார். இப்படி இந்த இருவரும் நட்பு பாராட்டுவது ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.
ராசி
தனுஷ் ஒரு படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தால் அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். அவரின் கை ராசி அப்படி என்கிறார்கள் தனுஷ் ரசிகர்கள். நல்லது தானே.

அனிருத்
ஜி.வி. பிரகாஷுடன் ராசியாகி மீண்டும் சேர்ந்து வேலை செய்வது போன்று அனிருத்தையும் உங்களின் படத்திற்கு இசையமைக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று தனுஷ் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











