Dhanush: தனுஷ் கையில் இருக்கும் 14 படங்கள்! லிஸ்ட் ரொம்ப பெருசுடோய்! வடசென்னை 2 இருக்கானு பாருங்க?
சென்னை: தமிழ் சினிமாவில் இருக்ககூடிய கம்ப்ளீட் கலைஞர்களில் தனுஷ்க்கு எப்போதும் தனி இடம் உண்டு. நடிகராக, பாடலாசிரியராக, இயக்குநராக, தயாரிப்பாளராக வெற்றிகளைக் குவித்துக் கொண்டே உள்ளார். இதுவரை 50 படங்களில் நடித்துள்ள தனுஷ், தனது 50வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இவரது நடிப்பில் அடுத்து குபேரா படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் தனுஷ் கையில் இருக்கும் படங்கள் லிஸ்ட் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
தனுஷ் சிறந்த நடிகர் என்பதற்கு பல படங்களை உதாரணம் கூறினாலும், அவர் ஒரு சிறந்த இயக்குநர் என்பதற்கு, அவர் இயக்கிய இரண்டு படங்களையும் உதாரணமாக கூறலாம். இரண்டு படங்களிலும் திரைக்கதையில் பலருக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், வெகுஜன ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். அதன் பின்னர், இவரது இயக்கத்தில் இட்லி கடை படம் உருவாகி வருகின்றது. இந்தப் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

இந்நிலையில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள குபேரா படம் வரும் டிசம்பர் மாதம் கடைசி வாரம் ரிலீஸ் ஆகவுள்ளது என கூறப்படுகின்றது. இப்படியான நிலையில், தனுஷ் கையில் ஏகப்பட்ட படங்கள் வரிசையாக இருப்பதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே இவரது நடிப்பில் வடசென்னை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களுக்கான அறிவிப்பு வெளியானது. இப்படியான நிலையில் மற்ற இயக்குநர்களுடனான படங்களின் லிஸ்ட் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

இளையராஜா பயோபிக்: சேகர் கம்முலாவின் குபேரா படம். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா நடித்துள்ளனர். இதையடுத்து இட்லி கடை படத்தில் தானே நடித்து இயக்கியும் வருகின்றார். இந்தப் படத்தில் நித்யா மேனனும் நடித்து வருகின்றார். இதையடுத்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தினை மொத்தம் இரண்டு பாகங்களாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

பாலிவுட் : அதன் பின்னர் பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல். ராய்யின் தேரே இஷ்க் மெய்ன் படத்திலும் கமிட் ஆகியுள்ளார். அதேபோல் போர்த்தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். மேலும் அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடனும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. அதேபோல், இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுடனும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளாதாக கூறப்படுகின்றது.

14 படங்கள்: மேலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், மகாராஜா பட இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனுடன் ஒரு படமும், வெற்றி மாறனின் இயக்கத்தில் வடசென்னை 2, செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2, மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநருடன் ஒரு படம் என மொத்தம் 14 படங்கள் லிஸ்ட்டில் தயாராக உள்ளது. இந்த தகவல் ஒட்டுமொத்த திரையுலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











