தனுஷூக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்கம்.. எல்லாத்துக்கும் காரணம் ராயன் தான்!

சென்னை: நடிகர் தனுஷ், பல திரைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு, பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுள்ளதால் இனி அவரை வைத்து படம் எடுக்க முன் வரும், தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்தாலோசிக்க வேண்டும் என புது உத்தரவு ஒன்றை தயாரிப்பாளர் உத்தரவிட்டுள்ளது. அவரது ரசிகர்களை மட்டுமில்லாமல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கத்தின் கூட்டம் சென்னையில் பெற்றது. இதில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தலைமையில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், கலந்து கொண்ட கூட்டுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Dhanush Raayan

ஓடிடி தளங்கள்: இதில் முதல் தீர்மானமாக,முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரத்திற்கு பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கம்: இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கனவே முன்பணத்தை பெற்ற தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களில் பணிபுரியாமல், புதியதாக வரும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று விடுகிறார்கள். இதனால், ஏற்கனவே முன்பணம் கொடுத்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகையால், இளிவரும் காலங்களில் எந்த ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் பெற்றிருந்தால் திரைப்படத்தினை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த திரைப்படங்களின் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ரசிகர்கள் அதிர்ச்சி: இதில் குறிப்பாக நடிகர் தனுஷ், பல திரைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு, பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுள்ளதால் இனி அவரை வைத்து படம் எடுக்க முன் வரும், தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்தாலோசிக்க வேண்டும் என புது உத்தரவு ஒன்றை தயாரிப்பாளர் போட்டுள்ளது. தனுஷ் ராயன் படத்திற்கு முன்பே பல படத்திற்கு தயாரிப்பாளரிடம் முன் பணத்தை பெற்றுக்கொண்டு, அதில் நடிக்காமல் காலம் தாழ்ந்தி ராயன் படத்தை வெளியிட்டதாக எழுந்த புகாரை அடுத்து தயாரிப்பாளர் சங்கம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது அவரது ரசிகர்களை மட்டுமில்லாமல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X