வெற்றிமாறன் படத்துல அவரு இல்லைன்னா எப்படி?: விடுதலையில் கடைசியாக இணைந்த தனுஷ்!
சென்னை: வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை' திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.
விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில், வெற்றிமாறனின் விடுதலை படத்தில் நடிகர் தனுஷும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறனின் விடுதலை
தமிழில் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ள வெற்றிமாறன், விடுதலை படத்தில் இன்னும் அமர்க்களம் செய்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி இருவரும் முதன்மையான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விடுதலையில் இசைஞானி
வெற்றிமாறனின் ஆஸ்தான நடிகர் தனுஷ் என்றால், அவருக்கு பிடித்த இசையமைப்பாளார் ஜிவி பிரகாஷ் தான். வெற்றிமாறன் - ஜிவி பிரகாஷ் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம், அசுரன் படங்கள், இசையிலும் ரசிகர்களை மிரட்டியிருந்தது. 'வட சென்னை' படத்தில் மட்டுமே வெற்றிமாறன் சந்தோஷ் நாராயணனுடன் பணியாற்றினார். இந்நிலையில், 'விடுதலை' மூலம் முதன்முறையாக வெற்றிமாறனின் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இறுதியாக இணைந்த தனுஷ்
வெற்றிமாறனின் படங்களில் தனுஷ் நடிக்காமல் இருந்தால் அது ரசிகர்களால் ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது. அவர் இயக்கிய விசாரணை படம் தவிர மற்ற படங்களில் எல்லாம் தனுஷ் தான் ஹீரோவாக நடித்துள்ளார். வெற்றிமாறன் - தனுஷ் இருவருக்குமான அல்டிமேட்டான கெமிஸ்ட்ரி அவ்வளவு வீரியமானது. ஆனால், வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தில் தனுஷ் நடிக்கவில்லை. சூரியும் விஜய் சேதுபதியும் தான் லீடிங் ரோலில் நடிக்கின்றனர். இந்நிலையில், தற்போது விடுதலை படத்தில் தனுஷ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளையராஜா இசையில் ஒரு பாடல்
'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில், இளையராஜா இசையில் விடுதலை படத்திற்காக, தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் விரைவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. வெற்றிமாறன் படத்தில் தனுஷ் நடிக்காமல் இருந்தது இருவரது ரசிகர்களிடமும் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில், தற்போது பாடல் மூலமாக அவர்களை கூல் செய்துள்ளது இந்தக் கூட்டணி.


Click it and Unblock the Notifications











