நானும் ரவுடி தான் பட சீன் மட்டுமில்ல.. நயன்தாரா டிரெஸ்ஸுக்கும் காப்பிரைட் கேட்பேன்.. பரபரப்பு வாதம்!
சென்னை: நடிகை நயன்தாரா தனது ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சியை பயன்படுத்திற்காக ரூ10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவின் உடைகள் மீதும் காப்புரிமை உள்ளது என தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ், கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரம் மற்றும் ஆடைகள் மீதும் காப்புரிமை பெற்றுள்ளது என்றும், அந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நயன்தாரா, நெட்ஃபிக்ஸ் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் "28 வினாடிகள்" காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளார். இதன் மூலம் நயன்தாரா பதிப்புரிமைச் சட்டம், 1957ன் விதிகளை மீறியுள்ளார். எனவே, அவருக்கு எதிராக சிவில் வழக்கு தொடர வேண்டும் என்றார்.

ஆடைக்கும் காப்புரிமை: ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதும், படத்தின் காப்புரிமை அனைத்தும் என்னிடம் உள்ளது. என் படத்தில் நயன்தாரா அணிந்திருக்கும் ஆடைகள் மீது கூட எனக்கு காப்புரிமை உள்ளது. மேலும், வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். எனவே, இதை கருத்தில் கொண்டு விசாரணைக்கு செல்லாம் என்று தனுஷ் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிட்டார்.
உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை: இதையடுத்து ஆஜரான ஆர்.பார்த்தசாரதி, வுண்டர்பாரின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் சென்னையில் இல்லை, மாறாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருப்பதால், இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, வுண்டர்பாரின் மனுவை நிராகரிக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தினார். மேலும், தயாரிப்பு நிறுவனம் 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமைச் சட்டம் 62வது பிரிவின்படி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்திலோ அல்லது நெட்ஃபிக்ஸ் அதன் பதிவு அலுவலகத்தைக் கொண்டிருப்பதால், கடிதங்கள் காப்புரிமைச் சட்டம், 1865 இன் பிரிவு 12 இன் படி, பம்பாய் உயர் நீதிமன்றத்தையோ அணுகியிருக்க வேண்டும் என்று பார்த்தசாரதி வாதிட்டார்.
காரசார வாதம்: இதற்கு பதிலளித்த பி.எஸ்.ராமன், 2015ம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்திற்காக நயன்தாரா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது, தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் சென்னையில் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில் இயக்கி வந்தது என்றும், படத்தின் ஒரு பகுதி சென்னையில் தான் படமாக்கப்பட்டது என்றும், நெட்ஃபிக்ஸ் வெளியிட்ட அந்த ஆவணப்படம் சென்னை உட்பட இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டது. எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வுண்டர்பாருக்கு முழு உரிமை உண்டு என்றார். இப்படி இரு தரப்பில் இருந்து மாறி மாறி காரசாரமான வாதம் நடைபெற்ற நிலையில், இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
தனிப்பட்ட வெறுப்பு: நடிகை நயன்தாரா தனது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில்,நானும் ரவுடி தான் திரைப்படத்தில் திரைக்குப் பின்னால் உள்ள மூன்று வினாடிகள் காட்சியை பயன்படுத்தியதற்காக தனுஷ் ₹10 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தனுஷ் தன் மீதும், எனது கணவர் மீதும் தனிப்பட்ட வெறுப்பைக் கொண்டிருப்பதாகக் கூறினார்.


Click it and Unblock the Notifications











