Rajini Birthday - பிரச்னை இருந்தாலும் பாசம் குறையல.. ரஜினிக்கு தனுஷ் சொன்ன வாழ்த்து என்ன தெரியுமா?

சென்னை: Rajinikanth Birthday (ரஜினிகாந்த் பிறந்தநாள்) நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு நடிகர் தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்திய சினிமாவுக்கும் பெரும் அடையாளமாக இருந்து வருகிறார்.

Dhanush has wished actor Rajinikanths birthday

ரசிகர்களால் சூப்பர் ஸ்டார், தலைவா என்று அழைக்கப்படும் அவர் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. அதற்கும் முன்னதாக வெளியான தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களும் தோல்வியடைந்தன.

பஞ்சாயத்து: அந்த இரண்டு படங்களும் தோல்வியடைந்ததால் ரஜினிகாந்த்தின் சகாப்தம் முடிந்துவிட்டதாகவே பலரும் கூறினார்கள். மேலும் சூப்பர் ஸ்டார் நாற்காலி இனி ரஜினிக்கு சொந்தமில்லை அது விஜய்க்குதான் சொந்தம் என்றும் விஜய் ரசிகர்கள் குரல் எழுப்ப ஆரம்பித்தனர். ஆனால் அதற்கு ரஜினி ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

ரஜினி கொடுத்த பதில்: இந்தப் பஞ்சாயத்துக்கு அமைதியாக இருந்த ரஜினி ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றி மூலம் தான் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டதாக அவரது ரசிகர்கள் உற்சாகமாக கூறினர். ஜெயிலர் படத்துக்கு பிறகு தற்போது ஞானவேலு இயக்கத்தில் 170ஆவது படத்தில் நடித்துவருகிறார் ரஜினி. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

இன்று டைட்டில் டீசர்: ரஜினிகாந்த் இன்று தனது 73ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி தலைவர் 170 படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகளையும் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் வாழ்த்து: இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவர” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ட்விட்டரிலும் ரஜினியின் பிறந்தநாளையொட்டி HBD Super star Rajinikanth என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.

பாசம் குறையல: தனுஷின் வாழ்த்தை பார்த்த ரசிகர்கள் என்னதான் பிரச்னையாக இருந்தாலும் ரஜினி மீது தனுஷுக்கு இருக்கும் பாசம் குறையலையே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். முன்னதாக ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாயும், தனுஷும் தங்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இப்போது பிரிந்து வாழ்ந்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X