லிப் டூ லிப்: நெளிந்த தனுஷ், சும்மா கொடுங்கன்னு தைரியம் கொடுத்த நடிகை
சென்னை: எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் லிப் டூ லிப் காட்சியில் நடிக்க தனுஷ் நெளிந்தாராம்.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், புதுமுகம் மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. படத்தின் இசையமைப்பாளர் பெயரை தெரிவிக்காமல் சஸ்பென்ஸாக வைத்திருந்தார் கவுதம்.
இந்நிலையில் தான் இசையமைப்பாளர் தர்புகா சிவா என்பது தெரிய வந்தது.

லிப் டூ லிப்
படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் இடையே சில லிப் டூ லிப் காட்சிகள் உள்ளதாம். லிப் டூ லிப்பா தனுஷ் அந்த காட்சிகளில் அசத்தியிருப்பார் என்று நீங்கள் எதிர்பார்த்தால் தவறு.

தனுஷ்
மேகாவுக்கு எப்படி லிப் டூ லிப் கொடுப்பது என்று தனுஷ் ரொம்பவே தயங்கி வெட்கத்தால் நெளிந்தாராம். இதை பார்த்த மேகா அட நடிப்பு தானே சார் சும்மா முத்தம் கொடுங்க என்று தனுஷுக்கு தைரியம் கூறினாராம்.

மேகா
இந்த தனுஷ் என்ன இப்படி வெட்கப்படுகிறாரே லிப் டூ லிப் காட்சிகளை எப்படி படமாக்குவது என்று படக்குழு தவித்தபோது மேகா அவருக்கு தைரியம் கூறி நடிக்க வைத்தது அவர்களை நிம்மதி அடைய வைத்ததாம்.

கவுதம்
மேகா மட்டும் தைரியம் கூறாமல் இருந்தால் தனுஷ் அந்த காட்சிகளில் நடித்திருக்க மாட்டார் என்கிறார்கள். லிப் டூ லிப் என்றாலும் அது திரையில் பார்க்க அறுவெறுப்பாக இருக்காதாம்.


Click it and Unblock the Notifications











