இளையராஜா படத்துக்கு இஷ்டத்துக்கு பில் போட்டாரா தனுஷ்?.. ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவு கேட்கிறாரா?
சென்னை: தனுஷ் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக படம் வசூல் ரீதியாக சொதப்பி விட்டது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தான் சொல்ல வந்த கதையை நேரடியாக எடுக்க முடியாத சூழலில் சுதந்திரத்துக்கு முந்தைய கதையாக மாற்றி எடுத்ததாக கூறியிருந்தார்.
கேப்டன் மில்லர் படத்தை பார்த்த விமர்சகர்கள் பலரும் இந்த கதை எங்கேயும் கனெக்ட் ஆகவில்லை என்கிற விமர்சனத்தை முன்வைத்து படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்ததன் விளைவாக படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஆனாலும் நடிகர் தனுஷ் தனது சம்பளத்தை சற்றும் குறைக்காமல் தற்போது அதிகபட்சமாக சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனுஷ் இயக்கத்தில்: அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்திலும் அண்ணன் செல்வராகவன் இயக்கத்திலும் நடித்துள்ள தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் மனைவியின் தங்கை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்திலும் நடித்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இயக்குநர்களாக உள்ள நிலையில், தானும் ஒரு படத்தை இயக்க வேண்டும் என நினைத்த தனுஷ் ப. பாண்டி படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ராயன் படத்தையும் இயக்கி நடித்துள்ளார். அடுத்த மாதம் அந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இளையராஜா பயோபிக்: நடிகர் தனுஷ் குபேரா படத்திலும் இளையராஜா பயோபிக் படத்திலும் நடித்து வருகிறார். இளையராஜா பயோபிக் படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
50 கோடி சம்பளம்: நடிகர் தனுஷ் ஒரு படத்துக்கு 50 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுக்க முடியாது என கூறி வருவதாகவும் 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் என்கிற அளவுக்கு தனுஷின் சம்பளம் உயர்ந்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டோர் 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்டு வரும் நிலையில், தனுஷ் தற்போது தனது சம்பளத்தை 50 கோடி ரூபாய்க்கு உயர்த்தியுள்ளார் என்கின்றனர். ஆனால், அந்தளவுக்கு அவர் நடிக்கும் படங்களின் வசூல் வருகிறதா? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது என்கின்றார்.


Click it and Unblock the Notifications











