idli kadai: தனுஷின் இட்லி கடை எப்போ ரிலீஸ் தெரியுமா? மாஸா வந்த அப்டேட்!

சென்னை: நடிகர் தனுஷ் இயக்குநராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் மாஸ் காட்டி வருகிறார். அவர் கடைசியாக இயக்கி நடித்த ராயன் படமும், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.சென்னை: நடிகர் தனுஷ் இயக்குநராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் மாஸ் காட்டி வருகிறார். அவர் கடைசியாக இயக்கி நடித்த ராயன் படமும், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Dhanush idli kadai

தயாரிப்பாளர் தனுஷ்: நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன், அண்ணன், தங்கை சென்டிமென்ட் திரைப்படமாக இருந்தாலும் இந்த திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிக அளவில் இருந்ததால், படம் அவ்வளவாக வசூலை பெறவில்லை. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, தனது அக்கா மகனை ஹீரோவாக வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் பிரியா வாரியர், அனிகா சுரேந்தர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த காலத்து இளசுகளை கவரும் வகையில் எடுக்கப்பட்டிருந்த இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

Dhanush idli kadai

படத்தின் ரிலீஸ் தேதி: தற்போது, தனுஷ் இட்லி கடை என்ற படத்தையும் இயக்கி அதில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனனும், வில்லனாக அருண் விஜய் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏப்ரல் மாதம், 10ந் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் படப்பிடிப்பு முடியாததால், படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்காமல் இருந்தது. இதையடுத்து, இன்று படக்குழு இட்லிகடை படம் அக்டோபர் 1ந் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனால், தனுஷ் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

கைவசம் உள்ள படம்: இந்த திரைப்படத்தை தொடர்ந்து சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தனுஷின் 51வது படமான இப்படத்தில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் மாதம் 20ந் தேதி பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாக உள்ளது. குபேரா படத்தை தொடர்ந்து ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ், அண்ணன் செல்வராகன் இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தில் நடித்தார். அந்த படத்தில் நடித்த போது பலரின் கேலிக்கு உள்ளான தனுஷ், தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு நடிப்பு, இயக்கம், பாடகர், தயாரிப்பு, பாடலாசிரியர் என அனைத்திலும் கலக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X