Idli Kadai First Review: இட்லி கடை முதல் விமர்சனம்.. சந்தேகமே வேண்டாம் கன்ஃபார்ம் பேமிலி எண்டர்டைனர்!

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இந்த படம் அவரது 52வது படம். ஏற்கனவே இவர் தனது இயக்கத்திலேயே, பவர் பாண்டி மற்றும் ராயன் படங்களில் நடித்துள்ளார். இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றது. இதில் ராயன் படம் அவரது 50வது படம் என்றாலும், அதில் அடிதடி, வெட்டு குத்துமாகவே இருந்தது. இந்நிலையில் அவர் மீண்டும் பவர் பாண்டி ஸ்டைலில் ஒரு கிராமத்துக் கதையை உருவாக்கி, இயக்கி நடித்துள்ளார். படம் இன்று வெளியாகவுள்ள நிலையில், படத்தை முன்னரே பார்த்தவர்கள் என்ன சொன்னார்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

இட்லி கடை படத்தைப் பொறுத்தவரை, தனுஷ் தன்னை மீண்டும் சகலகலா வல்லவனாக நிரூபித்துள்ளார். கதை, திரைக்கதை, நடிப்பு, பாடல்களை எழுதி, தானே பாடியது என மிரட்டி விட்டுள்ளார். படம் பார்த்த பலரும், குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க பக்காவான படம். மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளது. படத்தில் எல்லாமே நன்றாக உள்ளது. பாடல் வரிகளை அவரே கதைக்கு ஏற்ற படி எழுதியுள்ளதால், அதை காட்சிப்படுத்திய இடங்களும் பிரமாதமாக உள்ளது. குறிப்பாக, என் சாமி கூட வரும் பாடல் மிகவும் எமோஷனலாக உணர வைக்கிறது என்று தெரிவித்துள்ளார்கள்.

Dhanush Idli Kadai Movie Review Dhanush AND His Team Receives Good AND Positive Reviews

நம்பிக்கை: படத்தை பார்த்த சில விநியோகஸ்தர்கள் படம் ரொம்பவும் நன்றாக உள்ளது என தனுஷிடமே நேரடியாகத் தெரிவித்துள்ளார்கள். ராயன் போன்றும் படம் எடுக்குறீர்கள், இட்லி கடையில் இப்படியான சப்ஜெக்ட்டை ஹேண்டில் செய்துள்ளீர்கள், எப்படி தனுஷ் இதெல்லாம் என்றும் பாராட்டி உள்ளார்கள். படம் தனுஷ் ரசிகர்களை கடந்து பொதுமக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பிடிக்கும், குழந்தைகளும் பள்ளி விடுமுறையில் இருப்பதாலும், தொடர்ந்து அரசு விடுமுறைகள் இருப்பதாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கட்டாயம் இருக்கும் என்றும் பாராட்டி உள்ளார்கள். இதனால் தனுஷ் உட்பட மொத்த படக்குழுவும் நிம்மதியாக உள்ளார்கள்.

எதிர்பார்ப்பு: அதே நேரத்தில் ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு என்ன சொல்லப்போகிறார்கள் என்றும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். படத்தில் தனுஷ், நித்யா மேனன், சமுத்திரக்கனி, பார்த்திபன், சத்யராஜ், அருண் விஜய், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் இன்று அதாவது அக்டோபர் 1ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு தனுஷ் தமிழ்நாட்டில் மட்டும் தனித்தனியாக முக்கிய நகரங்களில் புரோமோசன் நிகழ்ச்சிகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X