காதல் தோல்வியில் துவண்டுப் போன தனுஷ்: வெளியானது ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் 4வது பாடல் ‘தேன்மொழி’

சென்னை: தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இருந்து ஏற்கனவே 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில், அனிருத் இசையில் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ள 'தேன்மொழி' என்ற 4வது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தப் பாடல் தனுஷ் ரசிகர்களிடம் செம்மையாக ரீச் ஆகும் என்பதில் சந்தேகமே இல்லை.

துள்ளும் இளமை

துள்ளும் இளமை

'துள்ளுவதோ இளமை' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தனுஷ், இன்று ஹாலிவுட் வரை அமர்க்களம் செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் வெளியான ஹாலிவுட் படமான தி கிரே மேனில் கேங்ஸ்டராக நடித்திருந்தார். தனுஷின் கேரக்டருக்கு ஏற்ப இரண்டு அதிரடி சண்டைக் காட்சிகளிலும் அதகளம் செய்திருப்பார். 40 வயதை நெருங்கிவிட்ட தனுஷ், இன்றும் இளமை துள்ளலுடன் இருப்பது பலருக்கும் ஆச்சரியமானது தான்.

வெற்றியும் தோல்வியும்

வெற்றியும் தோல்வியும்

வெற்றிமாறனுடன் 'அசுரன்', மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'கர்ணன்' என அடுத்தடுத்து சீரியஸ்ஸான படங்களில் நடித்த தனுஷ், அதனைத் தொடர்ந்து 'ஜகமே தந்திரம்', 'மாறன்' படங்களிலும் நடித்திருந்தார். ஆனால், ஜகமே தந்திரம், மாறன் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானதோடு, ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை. மேலும், இந்தியில் 'அத்ரங்கி ரே', ஹாலிவுட்டில் 'தி கிரே மேன்' என ரவுண்ட் அடித்துவிட்டு, தனுஷ் இப்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

'யாரடி நீ மோகினி' படத்தின் மூலம் தனுஷுக்கு ஹிட் கொடுத்த இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர், பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனுஷுடன் கூட்டணி வைத்துள்ளார். தனுஷுடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராக்‌ஷி கண்ணா, பிரகாஷ் ராஜ் என பெரும் நட்சத்திரப் பட்டாளங்களுடன் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகிறது. 'திருச்சிற்றம்பலம்' செம்ம ஜாலியான கமர்சியல் படமாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத்துடன் கூட்டணி

அனிருத்துடன் கூட்டணி

கோலிவுட்டில் இன்று ராக் ஸ்டாராக கலக்கி வரும் அனிருத்தை, '3' படத்தின் மூலம் தனுஷ் தான் மியூசிக் டைரக்டராக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பல ஹிட் படங்களில் பணிபுரிந்த இந்த காம்போ, திடீரென பிரேக் அப் ஆனது. இதற்கு பல காரணங்களும் ரசிகர்களால் சொல்லப்பட்டன. இந்நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு 'திருச்சிற்றம்பலம்' படத்தில் மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது.

தேன்மொழி பூங்கொடி

தேன்மொழி பூங்கொடி

திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து 'தாய் கிழவி' என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானதில் இருந்தே, தனுஷ் - அனிருத் காம்போவின் எனர்ஜி மீண்டும் எகிறத் தொடங்கியது. அடுத்தடுத்து மூன்று பாடல்கள் வெளியான நிலையில், தற்போது 4வது சிங்கிள் வெளியாகியுள்ளது. 'தேன்மொழி பூங்கொடி' எனத் தொடங்கிம் இப்பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். தனுஷ் காதலில் துவண்டுப் போய் பாடும் சோகப் பாடலாக வெளியாகியுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் ப்ளே லிஸ்ட்டை ஆக்கிரமித்துவிட்டது இந்த 'தேன்மோழி' பாடல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X