Actor Dhanush: தனுஷ் இயக்கத்தில் களமிறங்கும் மகன் யாத்ரா.. நடிகராக இல்லீங்க!

சென்னை: நடிகர் தனுஷ் கோலிவுட்டில் துவங்கிய தன்னுடைய பயணத்தை டோலிவுட், பாலிவுட், என விரிவுப்படுத்தி ஹாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து முடித்துள்ளார். மீண்டும் ஹாலிவுட்டில் அவர் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அவரது இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள் உருவாகியுள்ளன. அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் படம் கடந்த ஜனவரி மாதத்தில் ரிலீசாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் அவரது இயக்கம் + நடிப்பில் அடுத்ததாக ராயன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த படம் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே இந்த படத்தில் அவரது மூத்த மகன் யாத்ராவும் முக்கியமான பங்களிப்பை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. தன்னுடைய தாத்தா, அம்மா, சித்தி, அப்பா இவர்கள் வரிசையில் யாத்ராவும் சினிமாவை தன்னுடைய ப்ரொபஷனாக தேர்ந்தெடுத்துள்ளார். தொடர்ந்து அவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் இணைவார் என்று எதிர்பார்க்கலாம். தனுஷ் பன்முகத் திறமையுடன் சினிமாவில் பல தளங்களில் பணியாற்றி வரும் சூழலில் அவரது மகனும் அதே போன்ற பங்களிப்பை கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

Dhanush introduce his Son Yatra in his Raayan movie as cinematographer it seems

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் தன்னுடைய இயக்கத்தில் அடுத்தடுத்து ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என இரு படங்களை இயக்கி முடித்துள்ளார். இதில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் இன்னும் 30 சதவிகித சூட்டிங் மீதமுள்ளது. இதனிடையே தான் கமிட் செய்தபடி சேகர் கம்முலா இயக்கத்தில் அடுத்ததாக டி 51 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் இணைய உள்ளார் தனுஷ். தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் மீதமுள்ள சூட்டிங்கை அவர் நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேங்ஸ்டர் கதையில் ராயன்: இந்த படம் வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே சூட்டிங் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது ராயன் படம். இந்த படம் வரும் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். படத்தில் தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, செல்வ ராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், பிரகாஷ்ராஜ், உஷாரா விஜயன் அபர்ணா முரளி வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். கேங்ஸ்டர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாகக் கொண்டு இந்த படத்தின் ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ராயன் படத்தில் இணைந்த யாத்ரா: ப பாண்டி படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளியில் தனுஷின் இரண்டாவது படமாக ராயன் படம் உருவாகியுள்ளது. சரியான திட்டமிடலுடன் இந்த படத்தை குறுகிய காலத்தில் நடத்தி முடித்துள்ளார் தனுஷ். இதனிடையே இந்த படத்தில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா முக்கியமான ஒரு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராயன் படத்தில் யாத்ரா ஒளிப்பதிவாளராக செயல்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய தாத்தா ரஜினிகாந்த், அம்மா ஐஸ்வர்யா, அப்பா தனுஷ், சித்தி சௌந்தர்யா உள்ளிட்டவர்கள் வரிசையில் தற்போது யாத்ராவும் சினிமாவையே தன்னுடைய ப்ரொபஷனாக ஏற்றுள்ளார்.

ஒளிப்பதிவாளராக யாத்ரா: தன்னுடைய அப்பாவை போலவே இருக்கும் நிலையில் யாத்ரா சினிமாவில் நடிகராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் ஒளிப்பதிவாளராக தன்னுடைய ப்ரொபஷனை தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் நடிப்பில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கலாம். தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமையை சினிமாவில் காட்டி வருபவர். அந்த வகையில் யாத்திராவும் தற்போது ஒளிப்பதிவாளராக சினிமாவில் தன்னுடைய பயணத்தை துவங்கியுள்ளார். தொடர்ந்து அவரது பன்முக திறமைகளை எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X