»   »  சிவகார்த்திகேயனின் செல்போன் ரிங்டோன் என்ன தெரியுமா??

சிவகார்த்திகேயனின் செல்போன் ரிங்டோன் என்ன தெரியுமா??

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிமுருகன் வெற்றிப் படமாக மாறியதில் மகிழ்ந்து போன சிவகார்த்திகேயன் நேற்றிரவு ரசிகர்களுடன் #ask_sivakarthikeyan என்ற பெயரில் ரசிகர்களுடன் உரையாடினார்.

இதில் சிம்பு, அஜீத், விஜய் மற்றும் தனுஷ் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சிவகார்த்திகேயன் சுவாரசியமான முறையில் பதிலளித்தார்.

ரசிகர்களின் கேள்விகளுக்கு சிவகார்த்திகேயன் அளித்த பதில்களை இங்கே காணலாம்.

அஜீத் பண்புள்ள மனிதர்

சிவகார்த்திகேயன் சகோதரா தல அஜீத் பற்றி ஏதாவது சொல்லுங்கள் என்று ரசிகர் கேட்டதற்கு "அஜீத் ஒரு உண்மையான பண்புள்ள மனிதர். அவரின் வார்த்தைகளையும், அறிவுரையையும் என்னால் என்றும் மறக்க முடியாது" என்று கூறினார்.

விஜய் கையால் விருது

விஜய் விருது வழங்கும் விழாவில் விஜய் அண்ணா கையால் விருது வாங்கிய தருணம் குறித்து பகிர்ந்து கொள்ளுங்கள் என்று தளபதி பாலா கேட்டிருந்தார். இதற்கு "என் வாழ்க்கையின் சிறந்த தருணங்களில் ஒன்று. விஜய் சாரின் வார்த்தைகளை மறக்க முடியாது. இதனை உருவாக்கிக் தந்த அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்தார்.

சிம்பு

ரசிகர் ஒருவர் சிம்பு பற்றி கேட்டதற்கு சிம்பு ஒரு திறமையான மனிதர் என்று சிவகார்த்திகேயன் பதிலளித்தார்.

தனுஷின் ஹாலிவுட்

தனுஷ் ஹாலிவுட் செல்வது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு "நடிப்பில் தனுஷ் ஒரு திறமையான மனிதர். அதனை அவர் ஹாலிவுட்டிலும் நிரூபிப்பார்" என்று பதிலளித்தார்.

நெஞ்சம் உண்டு

உங்களின் தற்போதைய மொபைல் ரிங்டோன் என்ன என்ற கேள்விக்கு "எம்ஜிஆர் அவர்களின் நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு என்ற பாடலை ரிங்டோனாக வைத்திருக்கிறேன்" என்று கூறினார்.

இதுபோல ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் சிவகார்த்திகேயன் சுவாரசியமான பதில்களை அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
"Dhanush is a Genius Actor, He wil prove tat in Hollywood too" Actor Sivakarthikeyan says in Recent Interview.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos