சிவகார்த்திகேயனுக்கு முட்டுக்கட்டையே தனுஷ்தான்.. எழுந்து வர லேட் ஆகும்.. பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்
சென்னை: Sivakarthikeyan(சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயனுக்கு பல விஷயங்களில் தனுஷ் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்று திரை விமர்சகர் சுபைர் தெரிவித்திருக்கிறார்.
சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு தனுஷ் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் இதுவரை 20 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களும் 100 கோடி க்ளப்பில் இணைந்தன. ஆகையால் டாப் 10 ஹீரோக்கள் லிஸ்ட்டிலும் சிவா வந்துவிட்டார்.

இமான் குற்றச்சாட்டு: சூழல் இப்படி இருக்க இசையமைப்பாளர் இமான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார். அதை வெளியில் சொல்ல முடியாது என்று ஒரே போடாக போட்டார். அவரது குற்றச்சாட்டை அடுத்து எஸ்கே மீது பலரும் சந்தேகத்தை கிளப்பி இமானின் குடும்பத்தை பிரித்துவிட்டார் என்றும் பேச ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் சிவாவோ தொடர்ந்து அமைதியாக இருக்கிறார்.
சூழ்ச்சி என சொல்லும் ரசிகர்கள்: இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் இன்னொரு பேச்சும் எழுந்திருக்கிறது. அதாவது சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை திரைத்துறையில் பலராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அவருக்கு எதிராக ஒரு டீமே வேலை செய்கிறது. அதன் வெளிப்பாடுதான் இமானின் குற்றச்சாட்டு என்றும் சிவாவின் ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
தனுஷுடன் மோதல்: இதற்கிடையே சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்திய தனுஷுக்கும் அவருக்கும் கடந்த பல வருடங்களாகவே பிரச்னை இருந்துவருகிறது என்றும் அதனால்தான் ஏப்ரலில் ரிலீஸாக வேண்டிய கேப்டன் மில்லர் படத்தை அயலானுக்கு போட்டியாக தனுஷ் பொங்கலுக்கு இறக்குகிறார் என்ற தகவல் கோலிவுட்டில் பரபரத்துக்கொண்டிருக்கிறது.
சுபைர் பேட்டி: இந்நிலையில் திரை விமர்சகர் சுபைர் தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், "சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்திய தனுஷுக்கு சிவாவின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அயலானுக்கு போட்டியாக கேப்டன் மில்லரை ரிலீஸ் செய்கிறார். தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையே 5 வருடங்களுக்கு முன்பே உரசல் ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் அதை போக்க வேண்டும் என்பதற்காக இரண்டு பேரும் பேசிக்கொள்வது போன்ற ஆடியோவை திட்டமிட்டே வெளியிட்டார்கள். ஆனாலும் அந்த உரசல் மோதலாக மாறிவிட்டது.
முக்கியமாக இப்போது சிவகார்த்திகேயனின் நிலைமை சரியாக இல்லை. ஒரு பக்கம் இமானின் குற்றச்சாட்டு. மறுபக்கம் அவர் தலையில் 75 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. சமீபத்தில் தனது குடும்பத்துடன் அவர் போட்ட புகைப்படத்தின் கீழே கூட பலர் நெகட்டிவ்வாகத்தான் கமெண்ட்ஸ் செய்தனர். சிவகார்த்திகேயன் இதிலிருந்து எழுந்து வர தாமதம் ஆகும்" என்றார்.


Click it and Unblock the Notifications











