தனுஷ் ரொம்ப டிசிப்ளின்.. உசுரே நீதானே.. தங்கச்சி பாசம்னா இப்படி இருக்கணும்.. துஷாரா விஜயன் பளிச்!
சென்னை: நடிகர் துஷாரா விஜயனுக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி ஆண்டாகவே மாறியுள்ளது. தனுஷ் இயக்கி நடித்து வெளியான ராயன் திரைப்படத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த துஷாரா விஜயன் தொடர்ந்து தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ராயன் திரைப்படத்தில் தனுஷின் தங்கையாக நடித்திருந்தார். ஆக்சன் காட்சிகள், கொலை செய்வது, பலாத்கார காட்சி என படு போல்டாக நடித்திருந்தார்.

வேட்டையன் திரைப்படத்தில் ஒட்டுமொத்த படமே அவர் நடித்த சரண்யா டீச்சரின் மரணத்தை சுற்றியே நகர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனுஷ் குறித்து பல்வேறு விஷயங்களை துஷாரா விஜயன் கூறியுள்ளார்.
டிசிப்ளின் தனுஷ்: நடிகர் தனுஷ் குறித்து சமூக வலைதளத்திலும் சினிமா வட்டாரத்திலும் பல்வேறு கிசுகிசுக்கள் கிளம்பி வரும் நிலையில், தனுஷ் அப்படிப்பட்ட ஆள் கிடையாது தனுஷ் ரொம்பவே டிசிப்ளின் என நடிகை துஷாரா விஜயன் தனுஷ் குறித்த தனது கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.
தங்கச்சி பாசம்: ராயன் படத்தில் தனுஷுக்கு தங்கையாக நடித்து அசத்திய துஷாரா விஜயன் தனுஷ் குறித்தும் அவரது உழைப்பு குறித்தும் பாசிட்டிவாக பேசிய நிலையில், உசுரே நீதானே என தனுசு ரசிகர்கள் தங்கச்சி பாசம்னா இப்படி இருக்கணும் என துஷாராவை பாராட்டி கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
சரண்யா டீச்சர்: சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மாவாக முதலிரவில் ஆர்யாவுக்கு முன்னதாக குத்தாட்டம் போட்ட துஷாரா விஜயன் தனது முதல் படமான போதை ஏறி புத்தி மாறி படத்தில் நடிக்கும் போது வீட்டிற்கே சொல்லாமல் கல்லூரியை கட் செய்துவிட்டு நடித்ததாக கூறியுள்ளார். தற்போது சரண்யா டீச்சராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வேட்டையன் படத்தில் நடித்த அனுபவங்களையும் ரஜினி சாரின் கனிவு மற்றும் அவர் இளம் நடிகர்களையும் பாசமாக நடத்தும் விதத்தையும் வியந்து பேசியுள்ளார். தொடர்ந்து துஷாரா விஜயனுக்கு அடுத்த ஆண்டும் சிறப்பான படங்கள் அமைய வேண்டும் என்றும் லீடு ஹீரோயினாக துஷாரா விஜயன் நடித்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
ராயன் 2: தனுஷ் இயக்கத்தில் ராயன் 2 படம் உருவாக வேண்டும் என்றும் மீண்டும் தனுஷ், துஷாரா விஜயன் காம்பினேஷனில் படத்தை பார்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். சீக்கிரமே இருவரும் மீண்டும் இணையும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











