ரஜினி மருமகனையே டீலில் விட்ட பா. ரஞ்சித்: ஏங்கிக் கிடக்கும் தனுஷ்
சென்னை: காலா படத்தில் நடித்துவிட வேண்டும் என்று துடிக்கும் தனுஷை காக்க வைத்துள்ளார் பா. ரஞ்சித்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் பா. ரஞ்சித் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படம் காலா. ரஜினி தாதாவாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது.
படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரிக்கிறார்.

தனுஷ்
காலா படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துவிட வேண்டும் என்று தனுஷ் ஆசைப்படுகிறார். இந்த ஆசையை அவரே பல முறை வாய்விட்டு சொல்லிவிட்டார்.

ரஞ்சித்
இது என் படம். உங்களுக்காக எல்லாம் கதையை மாற்ற முடியாது என்று பா. ரஞ்சித் தனுஷிடம் கறாராக தெரிவித்துவிட்டாராம். ஆனாலும் தனுஷ் ரஞ்சித்தை விடுவதாக இல்லை.
Recommended Video


ரஜினி
காலா படத்தில் இளம் வயது ரஜினியாக தனுஷ் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. என்ன தனுஷ் உண்மையா என்று கேட்டபோது ஆசை தான் ஆனால் உண்மை இல்லை என்று முன்பு கூறினார்.

வெயிட்டிங்
காலா படத்தில் நடிக்க வாங்க என்று ரஞ்சித் கூப்பிட மாட்டாரா என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாராம் தனுஷ். ரஞ்சித்தின் போன் காலுக்காக வெயிட்டிங் என்கிறார் தனுஷ்.


Click it and Unblock the Notifications











