எதிர்பார்ப்பில் 'விஐபி' தனுஷ்: இறங்கி வருவாரா ஆலியா பட்?
மும்பை: வேலையில்லா பட்டதாரி படத்தின் இந்தி ரீமேக்கில் தனக்கு ஜோடியாக ஆலியா பட்டை நடிக்க வைக்க ஆசைப்படுகிறார் தனுஷ்.
தனுஷ் தயாரித்து நடித்த வேலையில்லா பட்டதாரி ஹிட்டாகியுள்ளது. இதனால் தனுஷ் மகிழ்ச்சியில் உள்ளார். இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
இந்த இரண்டு ரீமேக்குகளில் ஒன்றில் தனுஷ் நடிக்கிறார்.

இந்தி
ராஞ்ஹனா படம் மூலம் ஜிம் பாடி பாலிவுட் நடிகர்களுக்கு மத்தியில் பார்க்க சுள்ளானாக இருந்தாலும் தனது நடிப்பில் இந்தி பேசும் மக்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்துவிட்டார் தனுஷ்.

ரீமேக்
இந்தி பேசும் மக்களிடையே தனக்கு நல்ல பெயர் உள்ளதால் வேலையில்லா பட்டதாரி இந்தி ரீமேக்கில் தனுஷ் நடிக்கிறார்.

ஆலியா
பாலிவுட் மட்டும் இன்றி பல உட் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஆலியா பட்டை இந்தி ரீமேக்கில் நடிக்க வைக்க விரும்புகிறார் தனுஷ்.

சம்பளம்
வேலையில்லா பட்டதாரி இந்தி ரீமேக்கில் நடிக்க ஆலியா ரூ.3 கோடி கேட்கிறாராம். அது தான் தனுஷுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளது.

குறைப்பாரா?
ஆலியாவை தனது படத்தில் நடிக்க வைக்க தனுஷ் முயற்சி செய்வது இது இரண்டாவது முறை. ஆலியா தனது சம்பளத்தை குறைத்து தனுஷுடன் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அல்லு அர்ஜுன்
வேலையில்லா பட்டதாரி தெலுங்கு ரீமேக்கில் தனுஷ் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











