பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை அடிச்சு ஓடவிட்ட தனுஷ்.. கர்ணன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான கர்ணன் திரைப்படம் முதல் நாளில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நிகழ்த்தி உள்ளது.
Recommended Video
இதுவரை இல்லாத அளவுக்கு தனுஷ் நடித்த படங்களிலேயே அதிக வசூல் குவித்த படமாக கர்ணன் மாறி உள்ளது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

வந்தான் கர்ணன்
கொரோனா பரவல் காரணமாக மீண்டும் திரையரங்குகளில் இன்று முதல் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் தனுஷின் கர்ணன் திரைப்படம் எந்தவொரு பின் வாங்கலும் இல்லாமல் சொன்னபடியே நேற்று வெளியானது. தியேட்டர்களில் விசில் சத்தம் காதை கிழிக்க கர்ணன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பார்க்க வேண்டிய படம்
கர்ணன் படம் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால், கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய படம் என்கிற விமர்சனத்தையே படத்தை பார்த்த பலரும் வைத்து வருகின்றனர். ஏகப்பட்ட குறியீடுகளுடன் சமூகத்தில் காலம் காலமாக நிலவி வரும் சாதிய பிரச்சனைகளுக்கு எதிரான ஒரு குரலாக கர்ணன் உள்ளது என விமர்சனங்கள் குவிந்துள்ளன.

முதல் நாள் வசூல்
கர்ணன் திரைப்படம் நேற்று 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளில் வெளியாகின. இதுவரை தனுஷ் படங்களுக்கு இல்லாத அளவுக்கு இந்த படத்தின் வசூல் வந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 10.5 கோடி முதல் 11.5 கோடி வரை வசூல் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வடசென்னையை முந்தியாச்சு
சென்னையில் வடசென்னை படத்தின் முதல் நாள் வசூல் 82 லட்சமாக இருந்த நிலையில், கர்ணன் படத்தின் முதல் நாள் வசூல் 92 லட்சமாக உள்ளதாகவும் பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர். நடிகர் தனுஷுக்கு கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் போலவே
தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும் 50 சதவீத இருக்கைகளுடனே வெளியானது. ஆனாலும், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளை தொடர்ந்து முற்றுகையிட்டதன் விளைவாக அந்த படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்தது. தனுஷின் கர்ணன் திரைப்படமும் அப்படியொரு சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











