Tere Ishk Mein Trailer: ஹிந்தி காதல் கொண்டேனா தேரா இஷ்க் மென்?.. லைட்டா வாடை அடிக்குதே!

சென்னை: இந்திய திரையுலகில் வெற்றிகரமான பான் இந்தியா ஸ்டார் என்றால் அது தனுஷ் தான். தமிழ், தெலுங்கும் இந்தி என எந்த மொழியில் நடித்தாலும் அதில் ஹிட் கொடுக்கும் நடிகராக இருக்கிறார். இவரது நடிப்பில் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் தேரா இஷ்க் மென். இந்த படம் நேரடியான இந்தி படம். இந்த படத்தின் டிரைலர் இன்று அதாவது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. டிரைலர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் இருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கினாலும் இன்றைக்கு ஹாலிவுட் வரை காலடி எடுத்து வைத்து மிரட்டி வருகிறார், நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் இன்றைக்கு தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களை எடுத்தது மட்டும் இல்லாமல் அதில் வென்றும் வருகிறார்.

Dhanush Kriti Sanon Tere Ishk Mein Trailer Released Which is Recives Good Reviews From Fans
Photo Credit:

இப்படி இருக்கையில் நடிகர் தனுஷ் நடிப்பில் இந்தி மொழியில் உருவாகி உள்ள படம், தேரா இஷ்க் மென். இந்த படத்தை ஏற்கனவே தனுஷ் இந்தியில் நடித்த படமான ராஞ்சனா படத்தை இயக்கிய இயக்குநர், ஆனந்த் எல்.ஆர் இயக்கியுள்ளார். படத்தில் கீர்த்தி சனோன் உடன் இணைந்து நடித்துள்ளார். படத்தின் டிரைலர் மொத்தம் 3 நிமிடங்கள் 22 நொடிகளுக்கு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. டிரைலரைப் பார்க்கும்போது, படத்தில் கீர்த்தி சனோனுக்கு இரண்டு காதல்கள் இருப்பது தெரிய வருகிறது.

இந்தி காதல் கொண்டேனா?: காதல் தோல்வி என்பது படத்தில் ஆணின் காதலுக்கு மட்டும் இல்லாமல், பெண்ணின் காதல் தோல்வியும் படத்தில் காட்டப்பட்டுள்ளது என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் டிரைலரைப் பார்க்கும்போது, காதல், காதல் தோல்வி உள்ளிட்டவற்றை பார்க்கும் தமிழில் காதல் கொண்டேன் படத்தில் எப்படி கதாநாயகி மீது இருவருக்கு காதல் இருக்குமோ, கதாநாயகிக்கும் இருவர் மீதும் காதலும் ப்ரியமும் இருக்குமோ, அதாவது குழப்பமான மனநிலையில் இருப்பாரோ அதேபோல் இந்த படத்தின் டிரைலரிலும் இருப்பதால் ரசிகர்கள் இது இந்தி காதல் கொண்டேன் படமா என்றும் கேட்டு வருகிறார்கள். படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

Dhanush Kriti Sanon Tere Ishk Mein Trailer Released Which is Recives Good Reviews From Fans
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X