Dhanush: ஐஸ்வர்யா ரஜினிகாந்தை அட்டாக் செய்கிறாரா தனுஷ்?.. குபேரா முதல் பாடல் லிரிக் வீடியோ ரிலீஸ்!

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் என்றால் அது குபேரா. ஷேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நேரடி தெலுங்கு படம் என்றாலும் தமிழிலும் படம் வெளியாகிறது. படம் வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் முதல் பாடல், லிரிக் வீடியோவாக இன்று அதாவது ஏப்ரல் 20ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. போய் வா நண்பா என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார்.

நடிகர் தனுஷ் தற்போது பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். ஆனாலும் இவரது நடிப்பில் உருவாகி இரண்டு படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இதில் தனுஷே, எழுதி, இயக்கி நடித்துள்ள படமான இட்லி கடை படமும் அடங்கும். இந்த படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இதனால் ஷேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து உருவாகியுள்ள குபேரா படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளதால், அந்த படத்தை ஜூன் மாதத்தில் படக்குழு ரிலீஸ் செய்யவுள்ளது. இந்த படத்தின் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த ஆண்டே இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த படம் வெளியாகிறது.

Dhanush Kubera Movie First Single Poyivaa Nanba Song Lyrics Attacks Aishwarya Rajinikanth

பாடல்: படத்தை ஜூன் மாதம் வெளியிட படக்குழு முடிவெடுத்து விட்டதால், தற்போது மெல்ல மெல்ல படத்தின் புரோமோசன் வேலைகளைச் செய்து வருகிறது. அதாவது படத்தின் முதல் பாடலான 'போய் வா நண்பா' பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகியிருந்தது. அதன்படி பாடலும் இன்று வெளியாகிவிட்டது. பாடலை தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் ரீல்ஸாக மாற்றி வருகிறார்கள். பாடலாசிரியர் விவேக் இந்த பாடலை எழுதியுள்ளார், மேலும் பாடலை தமிழ் மற்றும் தெலுங்கில் தனுஷே பாடியுள்ளார்.

Dhanush Kubera Movie First Single Poyivaa Nanba Song Lyrics Attacks Aishwarya Rajinikanth

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: பாடலைக் கேட்ட ரசிகர்கள், தனுஷ் குரலில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு சூப் பாடல் கேட்பது போல் உள்ளது. மேலும் பாடலின் இசை மிகவும் துள்ளலாக இருப்பதால் பாடல் கேட்கவும் பிடித்திருக்கிறது என கூறி வருகிறார்கள். பாடலில் இருக்கும் வரிகளில் ' சன் டே இல்லை என் டே இல்லை இஷ்டம் போல நீயும் ஆடு, உன்னுடைய தலையெழுத்த நீயே எழுதிக்கடா' எனும் வரிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வரிகள், தனுஷ் தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து மறைமுகமாக பாடியுள்ளதாக சில இணையவாசிகள் கமெண்ட் அடித்து வருகிறார்கள். மேலும் போய் வா போய் வா என பாடல்கள் தொடங்குவதால் இந்த பாடலை ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு ஆகாகத்தான் பாடியுள்ளார் எனவும் கூறுகிறார்கள். இணையவாசிகள் என்னதான் சொன்னாலும், பாடல் வரிகள் தொடங்கி, தேவி ஸ்ரீபிரசாத்தின் இசை, தனுஷ் குரலில் பாடல் என சிறப்பாக இருப்பதால், படத்திற்கு சிறப்பான முறையில் புரோமோஷனை படக்குழு தொடங்கியுள்ளது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X