Kuberaa Box Office: தக் லைஃப், GBU, அமரனை ஓரம் கட்டிய குபேரா.. முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் சாதனை
சென்னை: இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் குபேரா. இந்த படம் நேற்று அதாவது ஜூன் 20ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படம் முதல் நாளில் தெலுங்கில் மட்டும் தமிழில் வெளியான அமரன், குட் பேட் அக்லி மற்றும் தக் லைஃப் உள்ளிட்ட படங்களின் மொத்த வசூலையும் கடந்து, பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளி உள்ளது.
குபேரா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் பிரச்னை என்றால் படத்தின் நீளம். படம் மொத்தம் 3 மணி நேரம் இரண்டு நிமிடங்கள் ஓடுகிறது. பல காட்சிகள் படத்திற்கு தேவையா இல்லையா என்ற வாதம் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும், விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாக்கப்பட்டு கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா அடிப்படையில் தெலுங்கு இயக்குநர், அதேபோல் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா அடிப்படையில் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்தவர் என்பதால், படத்திற்கு தெலுங்கில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

படம் வெளியாகி முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 10 கோடிகள் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிடும் சாக்.நிக் வலைதளம் வெளியிட்டுள்ளது. இந்த விபரத்தைப் பார்க்கும்போது, ஏற்கனவே சாக்நிக் வலைதளம் வெளியிட்டுள்ள அமரன், தக் லைஃப் மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களின் மொத்த வசூலைக் காட்டிலும் அதிகம். அதாவது அமரன் முதல் நாளில் ரூபாய் 4.5 கோடிகளும் தக் லைஃப் மற்றும் குட் பேட் அக்லி படங்கள் தலா ரூபாய் 1.5 கோடிகளும் வசூல் செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் தனுஷ் படங்களில் அதிக வசூலை தெலுங்கில் குவித்த படமாகவும் இது மாறியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழ் நடிகர் ஒருவரின் படம் முதல் நாளில் அதிக வசூலை குவித்த படமாகவும் குபேரா படம் மாறியுள்ளது.
படம் பார்த்த ரசிகர்கள், தனுஷ் சிறப்பாக நடித்துள்ளார். பிச்சைக்காரன் படத்திற்கு பின்னர் இந்த படம் சிறப்பான கதை. தனுஷ் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். இந்த படத்திற்கு அவருக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும். படம் ரொம்ப நன்றாக உள்ளது. படம் ஸ்லோவா சென்றாலும் சிறப்பாக உள்ளது. படம் கதையை மையமாகக் கொண்டுள்ளது. படத்தில் எங்குமே தொய்வு இல்லை. தனுஷ் சிறப்பாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் சிறப்பாக இசையமைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் கங்குவா படத்தைப் போல இசையமைக்காமல் சிறப்பாக இசையமைத்துள்ளார். மக்கள் பொறுமையாக இருந்து படத்தை பார்க்க வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு தகுதியான படம். பான் இந்தியா படமாக எடுத்துள்ளார்கள், படம் வொர்த்" என்று தெரிவித்துள்ளார்கள். ரசிகர்களின் இந்த விமர்சனம் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











