விடிஞ்சா கல்யாணம்.. இன்னும் புடி வெத்தல பாக்குன்னு கொடுக்கலையே.. குபேரா ரிலீஸில் என்ன சிக்கல்?

சென்னை: தன்னை பற்றி 4 வதந்திகளை பரப்பி விட்டால் காலி செய்து விடலாம் என சிலர் நினைக்கின்றனர். ஆனால், ஒரு செங்கலை கூட நகர்த்த முடியாது என சென்னையில் நடைபெற்ற குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படு மாஸாக தனுஷ் பேசியிருந்தார். ஆனால், குபேரா படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், இன்னமும் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் படத்தின் டிக்கெட் புக்கிங்கை தொடங்காமல் இருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த வாரம் அமீர்கானின் சித்தாரே ஜமீன் பர், தனுஷின் குபேரா, அதர்வாவின் டிஎன்ஏ, வைபவ் நடித்துள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் உள்ளிட்ட 4 படங்கள் தமிழில் வெளியாகின்றன. இதில், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெரிய படமான குபேரா படத்தின் டிக்கெட் புக்கிங்கில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவது தனுஷ் ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Dhanush Kuberaa movie still not started booking in multiplexes like PVR in Chennai
Photo Credit:

பெரிய படங்கள் வெளியானாலே தியேட்டர் ஓனர்களிடம் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை ஷேர் கேட்பதாக ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னமும் குபேரா படத்தின் பஞ்சாயத்து முடியவில்லை என்றும் அதனால் தான் டிக்கெட் புக்கிங் தொடங்கவில்லை என தகவல்கள் கசிந்துள்ளன.

ஹைதராபாத்தில் டிக்கெட் புக்கிங் ஓபன்: பிவிஆர், ஐநாக்ஸ் உள்ளிட்ட மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் ஹைதராபாத்தில் எந்தவொரு சிக்கலும் இன்றி தெலுங்கு வெர்ஷன் குபேரா படத்தின் டிக்கெட் புக்கிங்கை தொடங்கி விட்டன. ஆனால், சென்னையில் இன்னமும் குபேரா படத்தின் தமிழ் வெர்ஷனுக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கப்படவில்லை.

குபேரா படத்துக்கு என்ன சிக்கல்?: ரெட் ஜெயண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்யும் அதர்வாவின் டிஎன்ஏ திரைப்படத்துக்கான டிக்கெட் புக்கிங் சென்னையில் அனைத்து தியேட்டர்களும் ஆரம்பித்துள்ளது. ஆனால், அமீர்கானின் சித்தாரே ஜமீன் பர் தமிழ் வெர்ஷன் மற்றும் தனுஷின் குபேரா படத்தின் தமிழ் வெர்ஷனுக்கான டிக்கெட் புக்கிங் இன்னமும் தொடங்கப்படவில்லை. ஏற்கனவே படத்தின் நீளம் பெரிய பிரச்னையாக இருந்த நிலையில், 3.15 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. புதிய சென்சார் சர்டிபிகேட் வருவதற்காக மட்டுமே இன்னமும் பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ், ஏஜிஎஸ் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட் முன் பதிவு தொடங்கப்படவில்லை என்கின்றனர். இன்று மதியத்துக்குள் டிக்கெட் புக்கிங் தொடங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டல் அடிக்கும் டிக்கெட் புக்கிங்: கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா நடித்து இந்த மாத தொடக்கத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படம் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றிய நிலையில், புதிய படங்களை தியேட்டருக்குச் சென்று அதிக செலவு செய்து பார்க்க மக்கள் விருப்பம் தெரிவிக்கவில்லையா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. மாயாஜால், ரோகிணி, காசி என பல தியேட்டர்களிலும் குபேரா படத்தின் டிக்கெட் சில நாட்களுக்கு முன்னதாகவே ஓபன் செய்யப்பட்டாலும், இன்னமும் ஒரு காட்சி கூட பல இடங்களில் ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை என்கின்றனர்.

குபேரர் தான் காப்பாத்தணும்: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா என முன்னணி நடிகர்கள் நடித்துள்ள குபேரா படம் நாளை எந்தவொரு சிக்கலும் இன்றி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என தனுஷ் ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துள்ளனர். குபேரா படத்தை அந்த குபேரர் தான் காப்பாத்தணும் என்றும் சோஷியல் மீடியாவில் கமெண்டுகள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X