Don't Miss!
- Lifestyle
சப்பாத்தி, பூரிக்கு சூப்பராக இருக்கும்... ஆலு பட்டர் மசாலா
- News
"காவி".. நள்ளிரவு 2 மணிக்கு "அவருக்கு" போனை போட்ட ஷாருக்கான்.. மேட்டரை உடைத்த சி.எம்.. ஒரேநாளில் பரபர
- Sports
ஒரே போட்டியில் பல மாற்றங்கள்.. நியூசி, உடனான 3வது ODI போட்டி..ப்ளேயிங் 11ல் ரோகித் சர்மா பலே திட்டம்
- Technology
விபூதி அடிக்கும் BharOS என்கிற "பாரத்" ஓஎஸ்? இந்த உண்மை தெரிஞ்சா.. கழுவி கழுவி ஊத்துவீங்க!
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Finance
மீண்டும் இந்தியா.. டெஸ்லா-வுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் 3 மாநிலங்கள்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
இதெல்லாம் பத்தவே பத்தாது... சூடான தனுஷ்... பாதியில் நிறுத்தப்பட்ட கேப்டன் மில்லர் ஷூட்?
சென்னை: 2022ம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் 5 திரைப்படங்கள் வெளியாகின.
2023ம் ஆண்டிலும் தனுஷின் மூன்று திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் ரிலீஸில் இருந்து பின்வாங்கிய வாத்தி அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
இதனிடையே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த கேப்டன் மில்லர் படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனுஷ் இயக்கத்தில் விக்ரம் பட நடிகரா..? டைட்டிலே செம்ம மாஸா இருக்கே... அடிபொலி அப்டேட்

பிஸியான தனுஷ்
ஒரே நேரத்தில் இரண்டு மூன்று படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் தனுஷ். பெரிதாக கெட்டப் சேஞ்ச் இருக்காது என்பதால் எப்போதும் கேமரா முன்பே பிஸியாக இருக்கும் தனுஷ், 2023ம் ஆண்டிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். 2022ல் அத்ரங்கி ரே, தி கிரே மேன், மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்தன. ஆறாவதாக வாத்தி படமும் டிசம்பரில் ரிலீஸாகிருக்க வேண்டும். ஆனால், அந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

கேப்டன் மில்லர் ஷூட்டிங்
வாத்தி படத்தில் நடித்து முடித்த அதேவேகத்தில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் பீரியட் ஜானரில் ஆக்சன் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. தென்காசி, கேரளா பகுதிகளில் உள்ள காடுகளில் கேப்டன் மில்லர் ஷூட்டிங் நடைபெற்றது. தனுஷ் ஜோடியாக பிரியா பவானி சங்கரும், முக்கியமான பாத்திரங்களில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கோபமாக வெளியேறிய தனுஷ்?
ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி, கேரளா போன்ற வன பகுதிகளில் நடைபெற்று வந்தது. சில வாரங்களுக்கு முன்னர் அப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே தான் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தின் பூஜையும் தொடங்கியது. அதனால் கேப்டன் மில்லர் ஷூட்டிங் மீண்டும் எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தொடங்கிய படப்பிடிப்பு திரும்பவும் நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இன்னும் பிரம்மாண்டம் தேவை
கேப்டன் மில்லர் பிரீயட் திரைப்படமாக உருவாகி வருவதால் பெரும்பாலான காட்சிகள் செட் போட்டு எடுக்கப்படுகிறது. ஆனால் சமீபத்தில் ஒரு முக்கியமான காட்சிக்காக போடப்பட்ட செட் பிரம்மாண்டமாக இல்லை என சொல்லப்படுகிறது. அந்த காட்சிக்கு இப்படி செட் இருந்தால் நன்றாக இருக்காது என தனுஷ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளாராம். மேலும், இன்னும் பிரம்மாண்டமாக செட் போட்டால் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொள்வேன் எனக் கூறிவிட்டு அவர் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கேப்டன் மில்லர் படக்குழுவினர் ஷாக்கிங்கில் இருப்பதாக சொல்லப்படுகிறது.