ஐஸ்வர்யாவுடன் மீண்டும் இணைய விரும்பும் தனுஷ்?.. ரூட் அப்படி போகுதோ.. ரசிகர்கள் கேள்வி

சென்னை: தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன் படம் வெளியானது. அவரே இயக்கிய அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக அவர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார். மேலும் இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் பின்னணி தனுஷ் செய்திருக்கும் செயல் ஒன்று ரசிகர்களிடையே ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறது.

இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்திருப்பவர் தனுஷ். அசுரன் படத்தில் அவரது நடிப்பை பார்த்து இயக்குநர் இமயம் பாரதிராஜா பாராட்டியிருக்கிறார். அதேபோல் அது ஒரு கனாக்காலம் படத்தை இயக்கிய போது தனுஷ் ஒரு சர்வதேச நடிகராக உயர்வார் என்று பாலுமகேந்திராவும் கூறினார். அவர் சொன்னதுபோலவே இப்போது ஹாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் தனுஷ். பெரும் கிண்டல்களை சந்தித்த தனுஷ்; இப்போது அடைந்திருக்கும் வளர்ச்சி மதிக்கத்தக்கது.

dhanush aishwarya

ராயன்: அவரது நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அவரது 50ஆவது படமாக வெளியான அதனை அவரே இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த அந்தப் படம் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. முக்கியமாக படத்தின் ஸ்க்ரீன் ப்ளே படு மோசமாக இருந்ததாக பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். அடுத்ததாக அவரது கையில் குபேரா, இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்கள் இருக்கின்றன. மேலும் தனது இன்னொரு படத்தையும் அவரே இயக்கவிருக்கிறார். அதுகுறித்த அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.

பிரிந்த தனுஷ்: இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தனுஷ். இரண்டு மகன்கள் இருக்கும் சூழலில் தனுஷும், ஐஸ்வர்யாவும் இப்போது பிரிந்து வாழ்ந்துவருகிறார்கள். இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயன்றுவருவதாக ஒருபக்கமும், இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று மறுபக்கமும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அதேசமயம் கண்டிப்பாக இருவரும் சேர்வார்கள் என்று தனுஷின் நெருங்கிய வட்டாரம் கூறுகிறது.

என்ன நடந்தது?: தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிந்ததற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் இரண்டு பேருமே அதுகுறித்து எந்த விதமான ரியாக்‌ஷனும் கொடுக்கவில்லை. அதேசமயம் ஒருவரையொருவர் பொதுவெளியிலும் தரம் தாழ்ந்து பேசியதில்லை. இதனால்தான் அவர்கள் மீண்டும் இணைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்பட்டது.

உறுதி செய்த தனுஷ்?: அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் ஐஸ்வர்யா. அந்தப் புகைப்படங்களுக்கு தனுஷ் லைக் செய்திருந்தார். எனவே மீண்டும் அவர்கள் இணையவிருப்பதாக பலர் கூறினார்கள். ஆனால் அது மகன்களுக்காக போட்ட லைக் என்று ஒருதரப்பினர் சொன்னார்கள். இந்நிலையில் ஓணம் கொண்டாடிய புகைப்படத்தை ஐஸ்வர்யா இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். அதற்கும் தனுஷ் லைக் போட்டிருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் சில வாரங்களுக்கு முன்பு தனுஷ் மகன்களுக்காக லைக் போட்டார் சரி; இப்போது ஐஸ்வர்யா மட்டும் இருக்கும் படத்துக்கும் லைக்கிட்டிருப்பதன் மூலம் ஐஸ்வர்யாவுடன் மீண்டும் இணைவதற்கு விரும்புகிறாரோ என்று கேள்விகள் கேட்டுவருகின்றனர். எது எப்படியோ நல்லது நடந்தால் சரிதான் என்றும் அவர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X