தனுஷ் புரூஸ் லீ போல மூன்று விதமான ஆக்சன் போஸில்... குடியரசுதினத்தில் வெளியாகும் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
சென்னை : தொடர்ந்து வித்தியாசமான த்ரில்லர் படங்களை இயக்கிய ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன்
கார்த்திக் நரேன் முதன் முறையாக தனுஷுடன் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் மாறன்.
பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த மாறன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் குடியரசு தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

கார்த்திக் நரேன்
ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது இளம் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றார்கள் அப்படி அறிமுகமாகும் இயக்குனர்கள் வித்தியாச வித்தியாசமான கதைகளை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் துருவங்கள் பதினாறு என்ற வித்தியாசமான கதைக்களத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் கார்த்திக் நரேன் இப்போது தமிழ் ரசிகர்களின் நம்பிக்கை இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். துருவங்கள் பதினாறு மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வந்த நரகாசூரன் அனைத்து பணிகளும் முடிந்து பணப் பிரச்சினை காரணமாக இப்போது வரை வெளியிட முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மாறன்
இந்த நிலையில் அருண் விஜய் நடிப்பில் மாஃபியா என்ற அட்டகாசமான ஸ்டைலிஸ் கேங்ஸ்டர் படத்தை இயக்கி அதிலும் சிக்சர் அடித்த கார்த்திக் நரேன் இப்போது முதல் முறையாக தனுஷுடன் கூட்டணி அமைத்துள்ளார். அசுரன், கர்ணன் என தொடர்ந்து ராவான படங்களை கொடுத்து சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்று வரும் நடிகர் தனுஷ் முதல்முறையாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படத்திற்கு மாறன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளராக
இந்த படத்தில் தனுஷ் முதல்முறையாக பத்திரிகையாளராக நடிக்கிறார். மேலும் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் இதில் நடித்து வருகிறார் மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து மாளவிகா மோகனன் இந்த படத்தில் நடித்து வருவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

நேரடியாக ஓடிடியில்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தெறிக்க விட்ட சூழலில் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்ரில் இந்த படம் வெளியாகிறது.

ஃபர்ஸ்ட் சிங்கிள் "பொல்லாத உலகம்" வீடியோ பாடல்
இந்த நிலையில் படக்குழு தற்போது அட்டகாசமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது அதாவது குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி மாறன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் "பொல்லாத உலகம்" வீடியோ பாடல் வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் தனுஷ் புரூஸ் லீ போல மூன்று விதமான ஆக்சன் போஸில் தாறுமாறாக ஸ்டைலிஷ் லுக்கில் உள்ளார்.


Click it and Unblock the Notifications











